Followers

Monday, August 21, 2006

இந்து மதத்தில் காணப்படும் மறுமை வாழ்வு!

இந்து மதத்தில் காணப்படும் மறுமை வாழ்வு!

எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்
மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
47 : 15 - குர்ஆன்
இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
57 : 12 - குர்ஆன்

4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
11 : 106 - குர்ஆன்
நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
67 : 6 - குர்ஆன்

5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.
- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

அவர்களுடைய தலைகளுக்கு மேலிருந்தும் அவர்களுடைய பாதங்களுக்கு கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும்.
29 : 55 - குர்ஆன்
நரக நெருப்பு எரித்து மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்
74 : 30 - குர்ஆன்
நரக வாசிகளின் தேகத்திலிருந்து வடியும் சீழ்தான் அவர்களுக்கு குடி நீராக புகுட்டப் படும்.
14 : 16 - குர்ஆன்
கொதிக்கும் ஓர் ஊற்று ஜலம் புகட்டப் படும். முட்களைத் தவிர வேறு ஆகாரம் கிடையாது. அதனால் அவர்களுடைய தேகம் தழைக்கவும் மாட்டாது. பசியும் தீராது. நரகத்தில் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான்.
20 : 74 - குர்ஆன்

மேற்கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் வசனங்களைப் படிக்கும் போது இவ்விரண்டையும் ஆக்கியவன் ஒருவனே என்பது தெளிவாகிறது. மேலும் பல விபரங்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

the Brahma Sutra of Hindu Vedanta is:

‘Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan”
“Bhagwan ek hi hai dusara nahi hai, nahi hai, nahi hai, zara bhi nahi hai”.
“There is only one God, not the second, not at all, not at all, not in the least bit”.


இறைவனே மிக அறிந்தவன்

தகவலுக்கு நன்றி

ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

7 comments:

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

ஒரு தகவல் தேவை.

மரணத்திற்குப்பின் என்ன நடக்கிறது என்று பல மதங்கள் விவரிக்கின்றன. பெரும்பாலானவை ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்துக்களைக் கூறுகின்றன. உதாரணமாக, பெரும்பாலானவை குறிப்பிடுவது "ஆற்றினை கடத்தல்". ஆத்மாவானது இறந்த பின்னால் ஒரு ஆற்றினை கடந்து அடுத்த உலகை அடைகிறது என்பது போன்ற கருத்துக்கள் பொதுவாகக் காணக்கிடைக்கின்றன. இஸ்லாம் மதமானது இறந்த பின்னால் ஒரு ஆத்மாவின் பயணம் எப்படியெல்லாம் அமைகின்றது என்று கூறுகின்றதா? அங்கனம் கூறுமாயின் அந்த தகவல்களை தயவுசெய்து கூறுங்களேன்.

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

ஒரு தகவல் தேவை.

மரணத்திற்குப்பின் என்ன நடக்கிறது என்று பல மதங்கள் விவரிக்கின்றன. பெரும்பாலானவை ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்துக்களைக் கூறுகின்றன. உதாரணமாக, பெரும்பாலானவை குறிப்பிடுவது "ஆற்றினை கடத்தல்". ஆத்மாவானது இறந்த பின்னால் ஒரு ஆற்றினை கடந்து அடுத்த உலகை அடைகிறது என்பது போன்ற கருத்துக்கள் பொதுவாகக் காணக்கிடைக்கின்றன. இஸ்லாம் மதமானது இறந்த பின்னால் ஒரு ஆத்மாவின் பயணம் எப்படியெல்லாம் அமைகின்றது என்று கூறுகின்றதா? அங்கனம் கூறுமாயின் அந்த தகவல்களை தயவுசெய்து கூறுங்களேன்.

Muse (# 01429798200730556938) said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

அசலம்!

//Muslim and Non Muslim brothers can watch the matches between the holy books of each.//

அழகிய வர்ணனை.

//Thanks for your effort and do appreciate for your more article in future//

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் கொடுக்கும் ஆதரவிலும், உற்சாகத்திலும் தான் என் ஓய்வு நேரங்களை இது போன்ற பணிகளுக்கு அதிகம் செலவிட என்னைத் தூண்டுகிறது. இதற்கு முதற்கன் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அனைத்து பதிவுகளையும் படித்து தொடர்ந்து பின்னூட்டங்களும் இட்டு வரும் உங்களுக்கு நன்றிகள் பல. பஹ்ரைனில் வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் என் சலாமைக் கூறுங்கள்.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//. இஸ்லாம் மதமானது இறந்த பின்னால் ஒரு ஆத்மாவின் பயணம் எப்படியெல்லாம் அமைகின்றது என்று கூறுகின்றதா? அங்கனம் கூறுமாயின் அந்த தகவல்களை தயவுசெய்து கூறுங்களேன்.//
'உங்களுக்கென நியமிக்கப் பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார் பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்' என்று கூறுவீராக!
32 : 11 - குர்ஆன்

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை (தேவர்கள் என்றும் தேவதைகள் என்றும் பிற மதங்கள் இவர்களைப் பற்றி சொல்லும்) இறைவன் நியமித்து இருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவை இறைவனிடமிருந்து எதிர்ப் பார்த்த வண்ண்ம் அவர்கள் காத்திருக்கின்றனர். உத்தரவு வந்தவுடன் ஒரு நொடி கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது.

'இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.'
23 : 100 - குர்ஆன்.

ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப் பட்டு விடுகிறது என்று இந்த வசனம் விளக்குகிறது. இதன் மூலம் நாகூர் தர்காவில் சென்று நேர்ச்சை செய்வதோ, கோரிக்கை வைப்பதோ எந்த பலனும் தராது என்பதும் விளங்குகிறது. யுக முடிவு நாள் வரை இதே நிலை தொடரும் அந்த நாள் வந்தவுடன் கேள்வி கேட்பதற்காக அந்த ஆன்மாக்களை திரும்பவும் இறைவன் உயிர்ப்பிப்பான்.

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

தகவலுக்கு மிக்க நன்றிகள்.

Anonymous said...

//நாகூர் தர்காவில் சென்று நேர்ச்சை செய்வதோ, கோரிக்கை வைப்பதோ எந்த பலனும் தராது //

ஆமா நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டாரு

இவரோட தானை தலைவரு PJ கிட்ட
போன பண்ணி சொல்லிட்டா எல்லா
கோரிக்கையும் உடனே நிறைவேத்தி
வச்சுருவாறு

shareef