Followers

Sunday, December 25, 2011

நெகிழ வைக்கும் சில சம்பவங்கள்!

யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம்.

(6819. :புகாரி) இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள்.

(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கம் 'பலாத்' எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன்.

Volume :7 Book :86

இந்த நபிமொழியில் நாம் பெறும் செய்தி அன்றைய யூதர்கள் அவர்கள் குற்றம் செய்தால் அவர்களின் வேதத்தின் கட்டளைப்படியே தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமியருக்கு எப்படி குர்ஆனின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போல் யூத கிறித்தவர்களுக்கும் அவர்களின் வேத வசனத்தின்படியே தண்டனை வழங்கப்பட்டதையும் நாம் அறிகிறோம்.

அடுத்து ஒரு சம்பவம்

(6917. :புகாரி)அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள்.

(அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.
Volume :7 Book :87

இங்கு முகமது நபி தன்னை மற்ற தூதர்களை விட உயர்த்தி பேச வேண்டாம் என்று தடுப்பதை பார்க்கிறோம். முகமது நபி குர்ஆனை தனது சொந்த கற்பனையில் உருவாக்கியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது. ஏனெனில் எந்த மனிதனும் ஒரு மதததையோ ஸ்தாபனத்தையோ உருவாக்குவது தனது சீடர்கள் தனக்கு சேவகம் செய்ய வேண்டும். தனக்கு காணிக்கையாக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர். சாய்பாபா முதற்கொண்டு ரவிசங்கர் வரை இந்த நிலைதான்.

ஆனால் இங்கு நிலைமையை தலைகீழாக பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் முகமது நபியை உயர்த்தி பேசி ஒரு யூதரை அடித்து விடுகிறார். அந்த யூதரும் முகமது நபியிடம் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்று நம்பி முறையிடுகிரார். முகமது நபியும் தன்னை புகழ்ந்த முஸ்லிமை கண்டித்து மோசேயை விட என்னை அதிகம் புகழாதீர்கள் என்று அந்த முஸ்லிமுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுதான் இஸ்லாம்!

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை(முகமது நபியை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.'
-குர்ஆன் 2:146

17 comments:

Aashiq Ahamed said...

சலாம்..

மாஷா அல்லாஹ்..சூப்பர்...

பகிர்ந்ததற்கு ஜசாக்கல்லாஹ்...

Anonymous said...

antru kaleri thandanai intru kunderi thandanai

suvanappiriyan said...

அனானி!

//antru kaleri thandanai intru kunderi thandanai//

ஆமாம்...ஆமாம்.... சம்ஜோதா எக்ஸ்பிரஸில், மாலேகானில், ஹைதரபாத் ஜூம்ஆ மசூதியில், என்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் குண்டு வைத்தீர்கள். பொய் வழக்கு போட்டு அப்பாவி முஸ்லிம்களை சிறையில் அடைத்தீர்கள். முடிவில் குண்டு வைத்தது யார் என்பதை உலகம் அறிந்து கொண்டதே!

suvanappiriyan said...

//சலாம்..

மாஷா அல்லாஹ்..சூப்பர்...

பகிர்ந்ததற்கு ஜசாக்கல்லாஹ்...//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ ஆஷிக்!

Anonymous said...

நைஜீரியாவின் பல நகரங்களில் உள்ள பல தேவாலயங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்தாக்குதல், உலகம், கொலை, வன்முறைஒருங்கிணைக்கப்பட்ட வகையில் தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான போகோ ஹராம் அமைப்பு கூறியுள்ளது.

தலைநகர் அபுஜாவில் உள்ள றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நத்தார் தின வழிபாட்டாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

25 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மீட்புப் பணியாளர்கள் மீது, ஆத்திரமடைந்த கூட்டத்தினர் தாக்குவதை தடுப்பதற்காக சம்பவ இடத்துக்கு நைஜீரியப் படைகள் அனுப்பப்பட்டன.

மத்திய நகரான ஜொஸ்ஸில் நடந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

மூன்றாவது குண்டுத் தாக்குதல் வடகிழக்கு நகரான டமத்துருவில் நடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுவான போகோ ஹரம் குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான அண்மைய மோதல்களை அடுத்து, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பூசைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது

suvanappiriyan said...

அனானி!

//இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுவான போகோ ஹரம் குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான அண்மைய மோதல்களை அடுத்து, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலய பூசைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது//

பொதுவாக இது போன்று தேவாலயங்களையும் மசூதிகளையும் எந்த நாட்டு பொது மக்களும் சேதப்படுத்த மாட்டார்கள். ஒவ்வொருவரும் அண்ணன் தம்பிகளாகவே பழகி வருகின்றனர். வெளிநாட்டு சக்திகளே சிலரை விலை பேசி இது போன்ற குண்டு வெடிப்புகளை நடத்துகின்றன. ஈராக்கிலும் இன்று வரை அதுதான் நடந்து வருகிறது. நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க சிஐஏ, மொசாத் போன்ற நாசகார கும்பல்களுக்கு உள்ளூர் மக்கள் அடித்துக் கொண்டால்தான் வகையாக அறுவடை செய்ய முடியும்.

'கொலைக்கு பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதரையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும் 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம்.

-குர்ஆன் 5:32

குர்ஆனின் கட்டளை இவ்வளவு கடுமையாக கொலையை கண்டிக்க ஒரு சிலர் அப்பாவிகளுக்கு எதிராக ஆயுதத்தை கையில் எடுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுகின்றான்.

Unknown said...

மதங்கள் மனிதனின் உன்னதநிலையினை போதித்தாலும்... நான் அதிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டோம்

zalha said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான பதிவு.. ஆனால் இத் தலைப்பின் கீழ் பாகம் 1,2,3,....என்று போட்டுக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. தொடருங்கள் சகோ. இது மிகப் பிரயோசனமானது. அறியாத சகோதர்கள் உண்மையை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.

suvanappiriyan said...

திரு சாய் பிரசாத்!

//மதங்கள் மனிதனின் உன்னதநிலையினை போதித்தாலும்... நான் அதிலிருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டோம்//

உண்மைதான். மார்க்கங்கள் மனிதனின் உன்னத நிலையை போதித்தாலும்.... நாம் அதிலிருந்து விலகி வெகு தூரம் சென்று விட்டாம். இதில் உலகில் உள்ள அனைத்து மார்க்கங்களும் வருகின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ. ஜல்ஹா

//ஆனால் இத் தலைப்பின் கீழ் பாகம் 1,2,3,....என்று போட்டுக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. தொடருங்கள் சகோ. இது மிகப் பிரயோசனமானது.//

ஆம் சகோ. இது போன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது. நேரம் கிடைக்கும் போது பதிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

MUSAVIR said...

"நெகிழ வைக்கும் சில சம்பவங்கள்!" -இல் தாங்கள் இடுகையிட்டுள்ள யூதர் மற்றும் அன்ஸாரித்தோழர் இடையிலான சச்சரவு குறித்த நபிமொழி எண் மற்றும் அறிவிப்பாளர் பெயர் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.சரியான எண் 620.அறிவிப்பாளர் அபூஹூரைரா (ரலி)

A.Anburaj Anantha said...

அபலை பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்திருக்கும் நபா்களுக்ஃகு இந்த தகுதி யில்லை. இல்லவேயில்லை.

Unknown said...

👍

A.Anburaj Anantha said...

வேதங்களில் விதவை மறுமணம்
June 14, 2017
- ஆர். கோபிநாத்

ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் அவன் மனைவிக்கு சொல்வது போல:

‘ ஓ, பெண்ணே உன் கணவனை தகனம் செய்ய அனுமதிப்பாயாக. வாழும் உன் குடும்பத்தாரிடம் செல்வாயாக. உன் பிள்ளைகள் உன் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருக்கும் உன் வீட்டிற்கு செல்வாயாக. உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.’

இன்னொன்றும் சொல்கிறது ரிக் வேதம் – விதவைகளுக்கு மறுமணம் உண்டு என்கிறது. இறந்த பெண்ணின் கணவனின் வில்லை எடுத்து கொண்டு இந்த பெண்ணை மணம் செய்ய முடிவுசெய்துள்ளவன் சொல்வது போன்ற ஒரு சுலோகத்தை இவ்வாறு கூறுகிறது –

‘பெண்ணே இதோ சிதையில் இருக்கும் இவன் வில்லை நான் எடுத்து கொண்டேன். இது எனக்கு புகழையும், வலிமையையும், சக்தியையும் அளிக்கட்டும். இங்கு இருக்கும் இந்த உயர்ந்த மனிதர்களுடன் இணைந்து நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெல்வோம்.’

‘பெண்ணே இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்று அந்த விதவையை வாழ்த்துகிறது இன்னொரு சுலோகம்.

அதே மண்டலத்தின் பத்தொன்பதாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது:

” நாம் உறுதியும் தைரியமும் கொண்ட ஒரு புதிய வாழ்வை மேற்கொள்வோம் மகன்களை பெறுவோம் நம்மை வீழ்த்த நினைக்கும் எந்த ஒரு எதிர்ப்பையும் நாம் வெற்றிகொள்வோம்”.

4000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது அன்றைய வாழ்நிலை என்ன என்பதை காட்டும் கண்ணாடி ஹிந்து மதத்தின் ஆணிவேர் இதுவே. வேதங்களை அன்றி ஒரு சனாதன ஹிந்து வேறெதையும் மேற்கோள் காட்ட இயலாது என்றும் மாறா தன்மை உடையது அதனாலேயே சுருதி என்றழைக்கப்படுவது.
தமிழ் இந்து ... 2

A.Anburaj Anantha said...

கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்தாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

– பராசர ஸ்மிருதி, 4.30 (காலம்: பொ.யு 1-3ம் நூற்.)

நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை, பல இடங்களில் நாம் வியப்படையுமளவுக்கு பெண்ணுரிமைகளை முன்னெடுப்பதாக இருக்கின்றன என்பதற்கு இந்த சுலோகம் ஒரு சான்று. “கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்.. “ என்று சிலப்பதிகாரம் கைம்பெண்ணின் துயரம் பற்றிப் புலம்புவதற்கு முற்பட்ட காலத்திலேயே இந்த ஸ்மிருதி எழுதப்பட்டிருக்கிறது, இதன் நடைமுறைகள் புழக்கத்திலும் இருந்திருக்கலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நஷ்டே ம்ரு’தே ப்ரவஜிதே க்லீபே3 ச பதிதே பதௌ
பஞ்சஸ்வாபத்ஸு நாரீணாம் பதிரன்யோ விதீ4யதே.வாலியின் மரணத்திற்குப் பின் சுக்ரீவனுடன் வாழ்ந்தவள் தாரை (வால்மீகி ராமாயணப்படி). ராவணன் மரணமடைந்தவுடன் உயிரை விட்டவள் மந்தோதரி. இருவரையும் மாதரசிகள் என்று தான் நமது மரபு போற்றுகிறது.ஆனால், கம்பர் தாரை விதவைக் கோலத்தில் இருந்ததாக சித்தரிக்கிறாரே என்று கேட்கலாம். வால்மீகிக்கும் கம்பருக்குமிடையில் குறைந்தது 1500 ஆண்டு கால இடைவெளி இருந்திருக்கிறது (ஒப்பீட்டில் நமக்கும் கம்பனுக்குமான கால இடைவெளி 800 ஆண்டுகள் தான்). எனவே இது வடநாட்டு தென்னாட்டு வேறுபாடு அல்ல, *காலகட்டத்தின்* வேறுபாடு. கம்பர் எழுதியது அவர் வாழ்ந்த 12ம் நூற்றாண்டு சோழநாட்டு சமூக நடைமுறைகளையும் கருத்தில் வைத்துக் கொண்டு தானே அன்றி, நேரடியான ராமாயண மரபை அல்ல. இதே ரீதியில் தான், வால்மீகத்தில் வேட்டையாடி உண்ட ராம லட்சுமணர்களை மரக்கறி உணவாளர்களாக கம்பர் ஆக்கியிருக்கிறார்.

– ஜடாயு ஃபேஸ்புக் பதிவிலிருந்து.

A.Anburaj Anantha said...

பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு உண்டு; அது அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு எடுத்து ஹிந்து வாரிசுரிமை சட்டத்தை திருத்தி விதவைகளுக்கு கணவன் சொத்தில் பங்கு உண்டு என்றது.

சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள். பின் நாளில் அந்நிய படையெடுப்புகள் பெண்களை வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்ததால் வேறு வழியின்றி ஜவுஹார் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

ஐரோப்பியன் காட்டில் கரடித்தோலை அணிந்து கொண்டு, மானையும் காட்டுப்பன்றியையும் வேட்டையாட கல்லாயுதங்களை எடுத்துக்கொண்டு அலைந்த போது, பாலுறவு என்றால் என்ன என்றே தெரியாமல் மிருகம் போல பெண்களை புணர்ந்த போது, இங்கு நமது நாட்டில் இத்தகைய உயர் கலாச்சாரம் பின்பற்றப்பட்டது. ஏதோ வெள்ளைக்காரன் தான் இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களை செய்தான், ஈரோடு ராமசாமி வந்து தான் பெண்ணடிமை தனத்தை எதிர்த்தார் என்றெல்லாம் ஜல்லி அடிப்பவர்கள் இதையெல்லாம் படிக்கவில்லை. படித்தவர்களும் சொல்லவில்லை. என்ன செய்ய?

(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றிலிருந்து)


Unknown said...

யூதர்கள் யாரை பின்பற்றி யூதர்களாக ஆனார்கள் யாரை வழிபடுகிறார்கள்