Followers

Friday, June 15, 2012

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?

தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது ஏற்புடையதா?



சோமாலியாவில் இஸ்லாத்தை தவறாக விளங்கி தர்ஹாக்களை கட்டிய ஒரு இடத்தில் அதனை இடித்து தரை மட்டமாக்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தர்ஹாவை இடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அந்த ஊர் மக்கள் இதனை ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு இடிப்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

ஒருவன் இஸ்லாத்தை தவறாக விளங்கி தவறான வணக்கத்தை செய்தால் அவனுக்கு குர்ஆனின் சட்டங்களையும் நபி அவர்களின் உண்மையான போதனைகளையும் தொடர்ந்து எடுத்துக் கூறி வர வேண்டும். காலப் போக்கில் அவன் உண்மையை உணர்ந்து கொண்டு தர்ஹா வணக்கத்தை தூரமாக்குவான். ஐந்து வேளை பள்ளிக்கும் தொழுக வந்து விடுவான். அவனை கிண்டலடிப்பது, வேறு தகாத வார்த்தைகளால் அவனை கண்டிப்பது: போன்ற செயல்களை பலர் செய்வதால் அவன் வீம்புக்காகவாவது தர்ஹா வணக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான். இது மனித இயல்பு. எனவே தவறான கொள்கையில் நமது சகோதரன் இருந்தால் அவனை அன்போடும் பரிவோடும் நெருங்கி அவன் செய்து வரும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்.

15 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நாகூரில் தர்ஹாவுக்கு சிறிது தொலைவிலேயே தர்ஹா வணக்கத்தை கண்டித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்ஹா வருமானத்தில் வயிறு வளர்த்து வரும் ஃபக்கீர்கள் விடுவார்களா? சிறப்பு பேச்சாளராக பி.ஜெய்னுல்லாபுதீன். பெரும் கூட்டம். ஜெய்னுல்லாபுதீன் பேசிக் கொண்டிருக்கும் போது கற்கள் வந்து மேடையில் விழ ஆரம்பித்தது. கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்கள் வரிசையாக அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் ஜெய்னுல்லாபுதீன் தனது பேச்சை அப்படியும் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இது போல் தமிழகம் முழுவதும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்த பிரசாரம். தற்போது அதற்கான பலன் தமிழகத்தில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நாகூர் தர்ஹா டிரஸ்டுகளின் முக்கியஸ்தர்கள் வீட்டு இளைஞர்கள் பலர் இன்று தர்ஹா வணக்கத்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் முழவதும் இந்த நிலைதான். கொடி ஊர்வலம்: சந்தனக் கூடு வைபவம்: சமாதி வழிபாடு அனைத்தும் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிக் கண்ணனே தனது ஒரு பதிவில் 'எங்கள் ஊர் நாகையில் முன்பு நாகூர் சந்தனக் கூடு பல ஊர்களுக்கும் வரும்: ஹந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெறும்: பல நாட்கள் நடைபெறும்: பெரும் கூட்டமும் வரும்: இந்த வஹாபிகளின் பிரசாரத்தால் நாகூர் ஹந்தூரி வழமைபோல் அவ்வளவு சிறப்பாக இல்லை. கூட்டமும் குறைந்து விட்டது' என்று வருத்தப்படும் நிலையில்தான் உள்ளது. கோவிக் கண்ணனுக்கு வருத்தமாக தெரியும் ஒரு நிகழ்வு எனக்கு சந்தோஷமாக தெரிகிறது. இஸ்லாத்தை விளங்க வேண்டிய முறையில் விளங்கியதால் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தவறாக விளங்கியதால் அவருக்கு வருத்தத்தைத் தருகிறது.

'கதவைத் திற காற்று வரட்டும்' என்ற தொடர் தனது பக்தர்களுக்கு ஒருவர் எழுதியதை நாம் அறிவோம். பக்தர்களுக்கு காற்றை வரவழைத்து விட்டு தனக்கு அதாவது ஒரு சந்நியாசி எதை எல்லாம் தூரமாக்க வேண்டுமோ அதை எல்லாம் தனது அறைக்கு வரவழைத்தார். தனது மதம் சொன்ன கட்டளைகளை மீறினார். தற்போது 'கதவை திறந்தேன் போலீஸ் வந்தது' என்ற தொடரை வேறொரு பத்திரிக்கையில் தொடராக எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எந்த மதமாகவும் மார்க்கமாகவும் இருந்தாலும் புதிதாக புகுத்தப்பட்ட வணக்கங்கள் தூரமாக்கப்பட வேண்டும். இறை வேத நூல்கள் என்ன கட்டளை இட்டுள்ளதோ அதற்கு மாற்றமாக ஒரு வழக்கம் இருந்தால் அது எத்தனை வருடமாக நாம் பின் பற்றி வந்தாலும் தூரமாக்க தயங்கக் கூடாது.

இந்த புரிதலுக்கு நாம் வந்து விட்டால் பல குழப்பங்கள் தீர வழியுண்டு.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்த ஏகத்துவ பிரசாரத்தின் காரணமாக பல மூடப்பழக்கங்கள் ஒழிந்துள்ளன. இஸ்லாமியர்களிடையே படிப்பதில் அதிக ஆர்வம் உண்டாயிருக்கிறது. பெண்களும் இன்று கல்லூரியை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தப்பட்டு இஸ்லாத்தின் மேல் முஸ்லிம்களின் மேல் மாற்று மத சகோதரர்களுக்கு இருந்த தவறான கண்ணோட்டம் களையப்பட்டுள்ளது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் சுத்தமாக குறைந்துள்ளன. இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்க நினைத்து வைத்த குண்டுகளும் காவல் துறையால் சரியாக கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.



இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் எந்த சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைதி தொடர வேண்டும். அனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும் உள்ள தவறான கொள்கைகள் களையப்பட வேண்டும் என்பதே நம் அவா!

-------------------------------

அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது:

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
--------------------------------

கப்ர்களை கட்டக்கூடாது:

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610

--------------------------------

நபிமார்களின் கப்ர்களை கூட வணக்கஸ்தலங்களாக ஆக்க கூடாது:

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

--------------------------------

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்:

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873

--------------------------------

நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி

--------------------------------

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

-------------- 28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை. ”குடி அரசு” - சொற்பொழிவு - 02.08.1931





17 comments:

சிராஜ் said...

சலாம் அண்ணன்,
/* இது போல் தமிழகம் முழுவதும் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்த பிரசாரம். தற்போது அதற்கான பலன் தமிழகத்தில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நாகூர் தர்ஹா டிரஸ்டுகளின் முக்கியஸ்தர்கள் வீட்டு இளைஞர்கள் பலர் இன்று தர்ஹா வணக்கத்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் முழவதும் இந்த நிலைதான். கொடி ஊர்வலம்: சந்தனக் கூடு வைபவம்: சமாதி வழிபாடு அனைத்தும் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிக் கண்ணனே தனது ஒரு பதிவில் 'எங்கள் ஊர் நாகையில் முன்பு நாகூர் சந்தனக் கூடு பல ஊர்களுக்கும் வரும்: ஹந்தூரி வைபவம் சிறப்பாக நடைபெறும்: பல நாட்கள் நடைபெறும்: பெரும் கூட்டமும் வரும்: இந்த வஹாபிகளின் பிரசாரத்தால் நாகூர் ஹந்தூரி வழமைபோல் அவ்வளவு சிறப்பாக இல்லை. கூட்டமும் குறைந்து விட்டது' என்று வருத்தப்படும் நிலையில்தான் உள்ளது. */ இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் இதற்கான முழு பயனையும் இஸ்லாமிய சமூகம் அறுவடை செய்யும். இப்ப ஓடிகிட்டு இருக்கிறது நம்ம பிரச்சாரத்தின் மூலம் ஏற்பட்ட சலசலப்பு தான்..மக்கள் சாரை சாரை யாக வஹாபிகளாக(இது கோவி கண்ணனுக்காக பயன்படுத்திய வார்த்தைபா, சண்டைக்கு வந்துடாதீங்க) மாறும் காலம் ஒன்று நிச்சயம் வரும்.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் இதற்கான முழு பயனையும் இஸ்லாமிய சமூகம் அறுவடை செய்யும். இப்ப ஓடிகிட்டு இருக்கிறது நம்ம பிரச்சாரத்தின் மூலம் ஏற்பட்ட சலசலப்பு தான்..//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். எந்த சலசப்பும் இல்லாமல் அந்த மக்களே தர்ஹாக்களை அப்புறப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jafar ali said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மிக மிக சந்தோசமான பதிவு! இன்ஷா அல்லாஹ்! வரும் காலங்களில் ஓரிறை கொள்கையில் நம் சமுதாயம் முழுவதும் நுழைய நம் பிரச்சாரத்தை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்துவோமாக!

suvanappiriyan said...

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத் தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.

இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

-------------- 28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை. ”குடி அரசு” - சொற்பொழிவு - 02.08.1931

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஜாபர் அலி!

//மிக மிக சந்தோசமான பதிவு! இன்ஷா அல்லாஹ்! வரும் காலங்களில் ஓரிறை கொள்கையில் நம் சமுதாயம் முழுவதும் நுழைய நம் பிரச்சாரத்தை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்துவோமாக!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சார்வாகன் said...

ஸலாம் சகோ சுவ‌னன்

பழங்கால நினைவு சின்னங்களை ஆவணங்களாக பாதுகாக்க வேண்டும் என்பது நம் கருத்து.சோமாலியாவில் நடப்பதற்கு நாம் எதுவும் சொல்ல இயலாது.

இந்த சோமாலியாக்காரர்கள் பலர் பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இருப்பார்கள்.சுருட்டை முடி கூட பலருக்கு கிடையாது.

பலரை தவறாக தமிழர் என நினைத்து இருக்கிறேன்.(நான் போய் பேச என்னை ஒரு சோமாலியா சகோ அவங்க ஆள் என நினைத்தது வேறு கதை)
***
சவுதி இளவரசர் திரு நயீஃப் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!

நன்றி

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//பழங்கால நினைவு சின்னங்களை ஆவணங்களாக பாதுகாக்க வேண்டும் என்பது நம் கருத்து.சோமாலியாவில் நடப்பதற்கு நாம் எதுவும் சொல்ல இயலாது.//

பழங்கால நினைவு சின்னங்கள் மக்களுக்கு தங்களின் முன்னோர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். பல பேருக்கு இஸ்லாம் என்றால் தர்ஹா வழிபாடுதான் ஞாபகம் வரும். ஆனால் உண்மையான இஸ்லாமிய போதனை தர்ஹாக்களை இடித்து விடவே சொல்கிறது. மூடப்பழக்கங்கள் தர்ஹா வணக்கத்தினால் உண்டானதை நாகூரில் ஏர்வாடியில் நாம் பார்த்து வருகிறோம். எனவே இஸ்லாமிய வரலாறுகளை பாதுகாப்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவை புனிதமாக வணக்கஸ்தலமாக மாறக் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலை.

//இந்த சோமாலியாக்காரர்கள் பலர் பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இருப்பார்கள்.சுருட்டை முடி கூட பலருக்கு கிடையாது.

பலரை தவறாக தமிழர் என நினைத்து இருக்கிறேன்.(நான் போய் பேச என்னை ஒரு சோமாலியா சகோ அவங்க ஆள் என நினைத்தது வேறு கதை)//

சோமாலியர்களும் சூடானியர்களும் தோற்றத்தில் தமிழர்களைப் போலவே இருப்பர். நளினமாக பேசுதல்: முக சாடை: பழங்கால பழக்கங்கள் அனைத்தும் தமிழர்களை ஒத்தே இருக்கும். முதன் முதலில் மனித இனம் தோன்றியது ஆப்ரிகாவில் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அந்த காலத்தில் வறட்சியினால் அங்கிருந்து புலம் பெயர்ந்து நம் இந்தியாவை நமது முன்னோர்கள் அடைந்திருக்கலாம். அவர்களையே திராவிடர்கள் என்று நம்மவர்கள் அழைக்கின்றனர் போலும். உண்மையை இறைவனே அறிந்தவன்.

//சவுதி இளவரசர் திரு நயீஃப் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!//

சிறந்த நிர்வாகி! அவரை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும். இவ்வளவு முக்கியமான நபர் இறந்தும் எந்த ஒரு மாற்றமும் இங்கு சவுதியில் காண முடியவில்லை. டிராபிக்கை அடைத்து பொது மக்களுக்கு தொந்தரவு தரவில்லை. மெரினா பீச்சை போன்று கடற்கரையில் சிறப்பான சமாதியை உண்டாக்கவில்லை. வெறும் மண் தரையில் மக்களோடு மக்களாக அடக்கப்படுவார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மஸ்தூக்கா said...

அறியாமையால் ஏற்கனவே கப்ரை வழிபடுவர்களாக இருந்தவாகள் திருந்தி அவர்களே இப்போது இடிப்பவர்களாக இருந்திருக்க்லாம் அல்லவா?

suvanappiriyan said...

சகோ மஸ்தூக்கா!

//அறியாமையால் ஏற்கனவே கப்ரை வழிபடுவர்களாக இருந்தவாகள் திருந்தி அவர்களே இப்போது இடிப்பவர்களாக இருந்திருக்க்லாம் அல்லவா?//

முன்பு வணங்கியவர்களோ அல்லது வணங்கியவர்களை திருத்தியவர்களோ தெரியாது. மொத்தத்தில் அனைவரின் ஒப்புதலோடு பல இடங்களில் தர்ஹாக்கள் இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. வரவேற்போம்.

அந்த இடங்களில் கல்விச் சாலைகளோ அல்லது மருத்துவ மனைகளோ கட்டியால் அந்த மக்களுக்கு பயன் உண்டாகும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ சார்வகான் சொன்னது போல் புராதான விஷயங்கள் பாதுகாக்கப்படவேண்டியவையே... ஆனால் அதுவே மக்களின் மூடநம்பிக்கைக்கு வழி அமைத்துவிடுகிறது. அது போக மக்களின் மூடத்தனத்தை பணம் சம்பாதிக்கும் யுக்தியாக மாற்றப்பட்டு பல வருடங்களாச்சு!இத தெரியாம மக்களும் கடவுளுக்குன்னு நெனச்சு தேவை இல்லாம வீணர்களுக்கு தங்கள் பணத்தை தானம் செய்கிறார்கள். பல ஆதினங்கள் உழைக்காமல் உக்கார்ந்துக்கொண்டே பணக்காரர்களாவது இதுனால தான்!

மக்களை ஏமாற்றும் விஷயமாக,
மூடநம்பிக்கைக்கு வழிவித்திடும் விஷயமாக மாறும் போது அதை தரைமட்டமாக்குவதில் தவறே இல்ல!

தர்காக்கள் ஒழியட்டும்!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆமினா!

//மக்களை ஏமாற்றும் விஷயமாக,
மூடநம்பிக்கைக்கு வழிவித்திடும் விஷயமாக மாறும் போது அதை தரைமட்டமாக்குவதில் தவறே இல்ல!//

வாவ்....தர்ஹாக்களை அதிகம் நம்புவது பெண்மணிகளே! எனவே பெண்கள் புறத்திலிருந்து தர்ஹா தரை மட்டமாக்குதலுக்கு ஆதரவு வருவது அதிகம் வரவேற்கத்தக்கது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
தமிழ்நாட்டில் தவ்ஹீத் பிரச்சாரத்திற்க்கு பின் பெரிய தர்ஹாக்கள் பொலிவிழந்துவிட்டது.சிறிய‌ தர்ஹாக்களை கட்டி காசு பார்த்தவர்கள் மனம் திருந்தி இறையச்சத்தை அதிகப்படுத்தி ஏகத்துவ‌ கொள்கையில் உறுதியான பின் தர்ஹாக்களை மூடிவிட்டார்கள் என்று சொல்வதைவிட அந்த வழிகேட்டை மூட்டைகட்டிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.ஆனால் மக்களின் வரவுகள் குறைந்த பெரிய தர்ஹாக்கள் எனும் கட்டிடம் மட்டும் நிலைத்து நிற்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறிது காலத்தில் அந்த இடங்களும் ஏக இறைவனை மட்டுமே வணங்கக்கூடிய இறை இல்லமாக திகழும்.
இந்த மாற்றங்களை கொண்டுவர தவ்ஹீத் பிரச்சாரம் செய்பவர்கள் கையில் எடுத்தது கடப்பாறை அல்ல குர் ஆனையும்,நபிமொழியையும் மட்டுமே.

suvanappiriyan said...

சலாம் சகோ ஷஃபி!

//இந்த மாற்றங்களை கொண்டுவர தவ்ஹீத் பிரச்சாரம் செய்பவர்கள் கையில் எடுத்தது கடப்பாறை அல்ல குர் ஆனையும்,நபிமொழியையும் மட்டுமே. //

இந்த பதிவும் குர்ஆன் ஹதீஸை கையிலெடுத்து சாத்வீகமான முறையில் பிரசாரம் செய்யவே சொல்கிறது. அந்த மக்களே தர்ஹாக்களை புறக்கணிக்கும் நிலையை நாம் உண்டு பண்ண வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சுவன பிரியன்,

நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முறையாக உங்களது தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன்,

சென்ற வாரம் எனது ரூம் அருகில் தர்மபுரியை சேர்ந்த உருது மொழி பேசும் ஒரு டிரைவரிடம் தர்கா வழிபாட்டின் கேடினை பற்றி எடுத்து கூறிபேசிக்கொண்டு இருந்தேன்...அன்று முதல் என்னை ஒரு எதிரியாகவே பார்த்து கொண்டு இருக்கிறார் சலாம் சொன்னால் கூட பதில் சலாம் சொல்வது இல்லை...மேலும் எனது கார் சக்கரத்தில் ஆணி வைக்கும் அளவுக்கு ( இதை நான் கண்ணால் காணவில்லை மற்றவர் சொல்ல கேள்வி பட்டேன் ) சென்று விட்டார்....
உங்களது பதிவில் கூறியது போல சகோ பி.ஜே அவர்கள் எவ்வளவு அடக்கு முறைக்கு ஆள் ஆகி இருப்பார் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பத பதைக்கிறது, படைத்த இறைவன் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும்...

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ!

//நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முறையாக உங்களது தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன்,//

அடிக்கடி வந்து கருத்தை சொல்லி விட்டு செல்லுங்கள்.

//மேலும் எனது கார் சக்கரத்தில் ஆணி வைக்கும் அளவுக்கு ( இதை நான் கண்ணால் காணவில்லை மற்றவர் சொல்ல கேள்வி பட்டேன் ) சென்று விட்டார்....//

அறியாமல் செய்கிறார். நீங்கள் சளைக்காது குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். கண்டிப்பாக ஒருநாள் தர்ஹா மாயையிலிருந்து விலகி பள்ளிக்கு ஐந்து நேரமும் தொழுக வருவார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ
சு.பிரியன் Said..
** அறியாமல் செய்கிறார். நீங்கள் சளைக்காது குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். கண்டிப்பாக ஒருநாள் தர்ஹா மாயையிலிருந்து விலகி பள்ளிக்கு ஐந்து நேரமும் தொழுக வருவார்.**
ஐந்து வேளை தொழுதுக்கொண்டு இன்னபிற பார்சான அமல்களையும் செய்துக்கொண்டு அதே நேரத்தில் கேடுகெட்ட இந்த தர்ஹா வழிப்பாட்டினையும் செய்பவர்களை இறைவன் தான் நல்வழி காட்டவேண்டும்..
செருப்பின் வார் அறுந்துவிட்டாலும், அல்லாஹ்விடம்தான் உதவி கேட்கவேண்டுமென்று நபிமொழி இருக்கும்போது இவர்கள் ஏன் இப்படி ஷிர்க்கான வேலைகளை செய்கிறார்கள் ..??!!

Anonymous said...

அது சரி,
தவறாக அல்லாஹ்வை வழிபடும் வணக்கத்தலங்களை அனுமதி வாங்கிக்கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) இடித்தார்களா அல்லது முஸ்லீம்களை அனுப்பி அனுமதி இல்லாமலேயே இடித்தாரா?