Followers

Sunday, June 17, 2012

சவுதி இளவரசர் நாய்ஃப் பின் அப்துல் அஜீஸ் மரணமடைந்தார்!

இளவரசரின் இறந்த உடல் கொண்டு செல்லப்படும் காட்சிகள்





ஜெனிவாவில் இளவரசர் நாய்ஃப் 16-06-2012 சனிக்கிழமையன்று சுகவீனத்தினால் மரணமடைந்தார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

"நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக."
ஆதாரம்: முஸ்லிம் 1525


இறைவன் இவரது பாவங்களை மன்னித்து இவரை சுவனத்தில் பிரவேசிக்க வைப்பானாக! இவரது பிரிவால் வருத்தமுற்றிருக்கும் இவரது குடும்பத்தாருக்கு மன நிம்மதியைத் தந்தருள்வானாக!





78 வயதை தொட்டிருக்கும் இவர் சவுதியின் உள்துறை மந்திரியாக 1975 லிருந்து பணியாற்றி வருகிறார். இவரது அதிகாரத்தில் சவுதியில் அல்காய்தாவின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழித்தார். 2003 லிருந்து 2006 வரை இவரது தலைமையில் மிகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தீவிரவாதத்தை முற்றிலுமாக சவுதியில் ஒழித்தார். இளவரசர் சுல்தானின் இறப்புக்கு பிறகு அவரது பொறுப்புகளை மன்னர் அப்துல்லா நாய்ஃபிடம் தந்தார். பாதுகாப்பு அமைச்சராகவும் தனது பணியை சிறப்புடன் செய்தார். தனக்கு கொடுக்கப்பட்ட எந்த பொறுப்புகளையும் சிறப்பாக செய்வதில் இளவரசர் நாய்ஃப் வல்லவர்.

ஞாயிற்றுக்கிழமை மரணத்திற்கான தொழுகை மெக்காவில் நடத்தப்பட்டு எல்லோரும் அடக்கம் செய்யப்படும் பொது மையவாடியில் இவரது உடல் அடக்கம் செய்யப்படும். சவுதி அரேபியா முழுமையாக எங்கும் இதற்காக துக்கம் கொண்டாடியோ கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டவோ செய்யவில்லை. அவரவர் அவர்களின் வேலைகளை வழக்கமாக செய்து வருகின்றனர். நம் ஊர் மெரினாவைப் போல் சமாதியின் மேல் சிறப்பான கட்டிடங்கள் கட்டி அங்கு ஜோதி தொடர்ந்து எரிவது போல் எரிக்கப் போவதில்லை. மண் தரையில் வெறும் கூழாங் கற்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்படும். இவரது உருவச்சிலையை திறந்து இவரது பிறந்த இறந்த நாளன்று அனைத்து தலைவர்களும் மாலைகளை அணிவிக்கப் போவதில்லை. அடையாளத்துக்காக குவிக்கப்பட்ட சிறிய மண் மேடு கூட மழை நீரால் சில நாட்களில் கரைந்து தரை மட்டமாகி விடும்.

மிகப் பெரிய செல்வந்த நாட்டின் உள் துறை மந்திரியாகவும், பாதுகாப்பு மந்திரியாகவும், மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்த நிலையிலும், இளவரசராகவும் கம்பீரமாக வலம் வந்தவரின் உலக தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. இனி நிரந்தரமான மறு உலக பயணத்துக்கு சாதாரண மனிதனாக தயாராகி விட்டார்.



இவரது மறு உலக வாழ்வு சிறப்பாக அமைய இந்நேரம் பிரார்த்திப்போம்.

டிஸ்கி: இளவரசர் நாய்ஃப் இறந்ததற்காக அவருக்காக பிரார்த்தித்து பள்ளியில் இன்று இரவு தொழுகையில் கடமையான தொழுகைக்கு அடுத்து அவருக்காகவும் தொழுகை நடத்தப்பட்டது. நானும் கலந்து கொண்டேன்.

Thousands gather to bury Saudi crown prince - Middle East - Al Jazeera English



4 comments:

UNMAIKAL said...

"கலாமுக்கு பெற்றோர் வைத்த பெயரை இப்படியா கருணாநிதி களங்கப்படுத்துவது?"

சென்னை: அப்துல் கலாம் என்பது அவராக வைத்துக் கொண்ட பெயர் அல்ல. அவரது பெற்றோர், பெரியோர் வைத்த பெயர்.

அதை கருணாநிதி களங்கப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்று கீழ் பவானி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி கூறியதற்கு கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அப்துல் கலாம் என்ற பெயர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர் அல்ல.

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தபோது அவரது பெற்றோரும், பெரியோர்களும் வைத்த பெயர்.

அவர் முன்னாள் ஜனாதிபதி, மனித மாதிரியாக (ரோல் மாடல்) வாழ்ந்து வருபவர், எளிமைக்கு வலிமை சேர்த்தவர், பன்னாட்டு அளவில் நன்மதிப்பு பெற்றவர், பலராலும் மதிக்கப்படுபவர். இப்படிப்பட்டவரை கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா!

தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் பெயர் பொதுவாக கழகம் என்றே முடிகிறது. அப்படி என்றால் கழகம் என்பதற்கு என்ன பொருள்?

``பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்'' என்ற திருக்குறளின்படி பார்த்தால், கழகத்திற்குள் (சூதாடும் இடம்) காலை வைத்துவிட்டால் பழமையால் வழி வழிவந்த பாரம்பரிய செல்வமும், பண்பாடும் கெட்டுப் போகும் என்று பொருளாகும்.

கழகம் என்பது சூதாடும் இடத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. திமுக தலைவரும், வாழும் வள்ளுவர் என்று அழைக்கப்படுபவருமான கருணாநிதி இதை ஏற்றுக் கொள்வாரா?


அப்துல்கலாமிற்கும் கலகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை விரும்புபவரா? குற்றப்பின்னணி உள்ளவரா?

ஜனாதிபதி வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாமை ஏற்று ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கருணாநிதியின் முடிவு. இது அவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. அல்லது அவரது கட்சியின் முடிவாகவும் இருக்கலாம்.

பெற்றோரால் வைக்கப்பட்ட பெயரைக் கொண்டு அப்துல்கலாமை விமர்சிப்பதும், பெயருக்கு களங்கம் கற்பிப்பதும் நியாயமாகப்படவில்லை. இதிலுமா சொல் விளையாட்டு? என்று கண்டித்துள்ளார் நல்லசாமி.


கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்

சென்னை: கலாம் என்றால் கலகம் என்று தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில் கலாம் என்றால் கலகம் என்று தமிழில் பொருள் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது. கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இதுவரை அப்துல் கலாம் கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார். அதேசமயம், இஸ்லாமியர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இக்பால், கருணாநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியிடம் வருங்கால குடியரசு தலைவர் சம்பந்தமாக ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இஸ்லாமியர்களின் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தவண்ணம் உள்ளது.

ஊடகங்கள் அப்துல்கலாமை சம்பந்தப்படுத்தி கேட்டதற்கு, கலாம் என்றால் `கலகம்'தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த வார்த்தையை எந்த அகராதியில் இருந்து அறிந்து சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு வார்த்தையின் பொருள் தெரியாமல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பதில் கூறியுள்ளார்.

அரபி மொழியில் கலாம் என்றால் திருகுரானை குறிப்பிடுவார்கள். அப்துல் கலாம் என்றால் அப்துல் இறைசேவகன். கலாம் இறை வார்த்தை. இதற்கு இறை போதகர் என்ற பொருளாகும்.

இவ்வளவு புனிதமான வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாரோ என்று தெரியவில்லை.

இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இதை திராவிட முஸ்லீம் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தவறும் பட்சத்தில் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

SOURCE : THAT’S TAMIL.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//அப்துல்கலாமிற்கும் கலகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை விரும்புபவரா? குற்றப்பின்னணி உள்ளவரா?//

ஓரளவுக்கு மேல் வயது அதிகமாகி விட்டால் சிந்தனையில் கருத்துகளில் பல தடுமாற்றங்கள் வரும். அப்படிப்பட்ட ஒன்றே இது. பேசாமல் அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பெயராவது காப்பாற்றப்படும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அன்னூர்: கோவை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் குடும்பத்தினர் நான்குபேரை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவர் கைது செய்யப்பட்டான். திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவர் விவேக் (22). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவருடன் படித்து வந்த சரவணம்பட்டியைச்சேர்ந்த சக மாணவி, ஒருவரை காதலித்து வந்தான்.இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்ற‌ோருக்கு தெரிந்ததால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

சம்பவத்தன்று சரவணப்பட்டியில், உள்ள மாணவியி்ன் தந்தை ராஜா, தாயார் பரிமளா, மாணவியின் தங்கை நந்தினி ஆகியோரை , வீட்டிற்கு சென்று சந்தித்த மாணவன் விவேக் ,திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் நான்குபேரையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினான். உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேரும் கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ‌கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் நேரு வழக்குப்பதிவு செய்து மாணவர் விவேக்கை கைது செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-Dinamalar
17-06-2012

Anonymous said...

கருணாநிதியின் பித்தலாட்டங்களிற் சில:

தமிழீழம் என்பது தனது நிறைவேறாத கனவாம். பதவியிலிருந்த போது தமிழீழம் என்பது ஒரு கெட்டவார்த்தையாம்.

அப்துல் கலாமின் பெயர் அரபுப் பெயராக இருக்கும் போது அதற்கு முறையற்ற பொருளொன்றை வேண்டுமென்றே கூறுகிறார். அரபுப் பெயருக்கு அரபியிலிருந்தல்லவா பொருள் வர வேண்டும். பட்டறிவு உள்ளோர் ஒருக்காலும் அப்படிச் சொல்லார்.

- வள்ளுவன்