Followers

Sunday, June 24, 2012

முஹம்மது முர்ஷி எகிப்தில் வெற்றி பெற்றார்!



இஸ்ரேல்: ஐயையோ! என்னய்யா இது! எகிப்துல இஹ்வான்கள் ஆட்சியைப் புடிச்சுட்டானுங்க!

யுஎஸ்: மவனே! இனி வாலை ஆட்டுனே! ஒட்ட நறுக்கிபுடுவானுங்க! அவ்வளவுதான் நான் சொல்லுவேன். இனி பார்த்து நடந்துக்க!

--------------------------------



பல நாள் இழுபறிக்குப் பிறகு இன்று 'முஸ்லிம் பிரதர்ஹூட்' ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்து காட்டிய குள்ளநரித்தனங்களையும் காலடியில் போட்டு மிதித்து இன்று மிகப் பெரிய வெற்றியை முர்ஷி பெற்றுள்ளார்.



60 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியாளர்களையே பார்த்து வந்த எகிப்திய மக்கள் இன்று தூய இஸ்லாமிய ஆட்சியை உளமாற வரவேற்றிருக்கிறார்கள். இனி சன்னம் சன்னமாக குர்ஆனிய ஆட்சி முறை அமுல்படுத்தப்படும். மதுக்களும் சிகப்பு விளக்கு பகுதிகளும் இனி தொடர்வது எகிப்தில் கேள்விக் குறியே! அரை குறை ஆடையோடு சன் பாத் எடுக்கும் கலாசாரத்துக்கும் இனி மூடுவிழா நடத்தப்படலாம். இதனால் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையலாம். இவர்களினால் ஏற்படும் இழப்பை அரசு வேறு மார்க்கத்தில் இனி ஈட்ட வேண்டி வரலாம்.



தஹ்ரீர் சதுக்கத்தில் 'இஹ்வான்களின்' வெற்றிச் செய்தியை கேட்டமாத்திரத்தில் இளைஞர்கள் உற்சாக கரகோசம் எழுப்பியும் நடனமாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மோர்சியின் செய்தி தொடர்பாளர் அப்துல் அதி கூறும்போது 'விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அளவு சந்தோஷத்தில் இருக்கிறோம். சகோதரர்கள், தியாகிகள் செய்த உயிர் தியாகம் எங்களுக்கு இந்த வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.' என்கிறார்.




எகிப்திய தேர்தல் கமிஷன் 51.7 சதவீத வாக்குகளை 'முஸ்லிம் பிரதர் ஹூட்' கைப்பற்றியுள்ளதாகவும் முபாரக் ஆதரவு பெற்ற கட்சி 48.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வருவதை ராணுவ ஆட்சியாளர்கள் தடுக்க எவ்வளவோ முயற்சித்தனர். இதற்கு அமெரிக்காவின் ஆதரவு வேறு இருந்தது. இருந்தும் மக்கள் சக்திக்கு முன்னால் மக்களின் எண்ண ஓட்டத்துக்கு முன்னால் வல்லரசுகளெல்லாம் காணாமல் போய் விட்டன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வெற்றியை விரும்பாத அமெரிக்கா இனி ராணுவத்தோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க தன்னாலான முயற்சிகளை இஸ்ரேலின் துணையோடு செய்ய முயற்சிக்கும். ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான்களை கவிழ்த்தன் பலனை அமெரிக்கா இன்று வரை அனுபவித்து வருகிறது. மற்றொரு தவறை செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாது என்றே நம்புவோம்.

அதிபர் முர்ஷிக்கு வயது 60 ஆகிறது. அமெரிக்காவில் படித்த இன்ஜினீயர் இவர். முபாரக்கினால் சிறை வைக்கப் பட்டவர். 'சர்வதேச சமூகத்துக்கு என்றும் மதிப்பளிப்பேன். 1979 ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலுடனான உறவு தொடரும். ராணுவத்தோடு உள்ள முறுகல் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். பல சவால்களை இன்று நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.' என்கிறார்.

சவுதி அரேபியாவை முன் மாதிரியாகக் கொண்டு குர்ஆனின் அடிப்படையில் எகிப்திய புதிய அரசு உண்மையான இஸ்லாத்தை கையிலெடுத்து சிறுபான்மை மக்களான கிறித்தவர்களுக்கும் உரிய பங்கினை அளித்து வெற்றி நடை போட வாழ்த்துவோம்.

33 comments:

சிராஜ் said...

/* ஆனால் ஆப்கானிஸ்தானத்தில் தாலிபான்களை கவிழ்த்தன் பலனை அமெரிக்கா இன்று வரை அனுபவித்து வருகிறது. */

இது புரியலை..கொஞ்சம் விளக்குங்கண்ணே???? உண்மையில் அமெரிக்கா இப்போ தாலிபன்களுடன் போர் நிறுத்தத்துக்கு முயற்ச்சி செஞ்சுகிட்டு இருக்கு..... இதுக்காக கத்தாரில் ஒரு ஆபிஸே தனியா திறந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்... முத்தரப்பு பேச்சு வார்த்தை.. தலிபான், பாகிஸ்தான் அன்ட் அமெரிக்கா.....

சிராஜ் said...

தாலிபன்கன்கள் கொரில்லா போர் முறைய பின்பற்றதால நமக்கு பார்க்க அமெரிக்கா கண்ட்ரோல்ல ஆப்கானிஸ்தான் இருக்கிற மாதிரி தோணுது.. ஆன உண்மை அதுவல்ல...இப்பொழுதும் முழு கண்ட்ரோல் அவங்க கைல தான் இருக்கு... அமெரிக்கா அந்த நாட்ட விட்டு போன ஒரு நாள்ல தாலிபன்கள் மீண்டும் ஆட்சிய பிடிச்சிடுவாங்க..இதான் எதார்த்தம்...

சிராஜ் said...

மற்றபடி.. எகிப்தில் முஹம்மது முர்ஷி அவர்களின் வெற்றி... இஸ்லாமிய உலகிற்க்கு நிச்சயம் நற்செய்தியே.... பார்ப்போம் இவர்களாவது கடைசி வரை இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுகிறார்களா என்று...

.RAHMANFAYED said...

மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாவிற்கே.. INSHA ALLAH, VERY SOON EGYPT GO TO REACH GOOD LEVEL

Unknown said...

\\சவுதி அரேபியாவை முன் மாதிரியாகக் கொண்டு குர்ஆனின் அடிப்படையில் ... \\

என்ன சொல்ல வருகிறீர்கள் சுவனப்பிரியன்? சவூதி அரேபியாவில் குர்ஆனிய ஆட்சி நடக்கிறதா? சொல்லவே இல்ல....

\\ 60 ஆண்டுகளாக ராணுவ ஆட்சியாளர்களையே பார்த்து வந்த எகிப்திய மக்கள் இன்று தூய இஸ்லாமிய ஆட்சியை உளமாற வரவேற்றிருக்கிறார்கள். \\

தூய இஸ்லாமிய ஆட்சி நடக்குமா என இனிதான் பார்க்க வேண்டும்... இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து கொண்டு எப்படி நடக்கும் என்பதை பார்த்தால் தான் தெரியும்...

suvanappiriyan said...

திரு அனானி!

//என்ன சொல்ல வருகிறீர்கள் சுவனப்பிரியன்? சவூதி அரேபியாவில் குர்ஆனிய ஆட்சி நடக்கிறதா? சொல்லவே இல்ல....//

மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும்போது சவுதி ஓரளவு குர்ஆனின் வழி ஆட்சி நடப்பதாகவே கொள்ளலாம். சில நிர்பந்தங்கள் அமெரிக்கா மூலம் அவர்களுக்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. எனினும் குறை சொல்லும் அளவுக்கு ஆட்சி இல்லை.

//தூய இஸ்லாமிய ஆட்சி நடக்குமா என இனிதான் பார்க்க வேண்டும்... இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து கொண்டு எப்படி நடக்கும் என்பதை பார்த்தால் தான் தெரியும்...//

நானும் அவலோடு காத்திருக்கிறேன். படித்த மக்களை அதிகம் கொண்ட எகிப்து நிச்சயம் ஒரு சிறந்த ஆட்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இது புரியலை..கொஞ்சம் விளக்குங்கண்ணே???? உண்மையில் அமெரிக்கா இப்போ தாலிபன்களுடன் போர் நிறுத்தத்துக்கு முயற்ச்சி செஞ்சுகிட்டு இருக்கு..... இதுக்காக கத்தாரில் ஒரு ஆபிஸே தனியா திறந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்... முத்தரப்பு பேச்சு வார்த்தை.. தலிபான், பாகிஸ்தான் அன்ட் அமெரிக்கா....//

ஆப்கனில் தனது படையை நிறுவி இஸ்லாமிய எழுச்சியை தடுத்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய திட்டம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக ஆப்கனில் இஸ்லாமிய எழுச்சியை அமெரிக்க ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அமெரிக்க ராணுவத்துக்கு ஆப்கனைப் போன்ற பாலைவன உஷ்ண பிரதேசங்கள் உடல் ரீதியாக பல இழப்புகளை தாராளமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலர் மனநோய் பிடித்து பைத்தியமாக அமெரிக்க மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 2012 ல் ஆப்கனைப் போல் அமெரிக்க ராணுவத்தை உலகம் முழுக்க நிறுவ 707 பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது. இந்த செலவுகளை ஆப்கனின் கனிம வளங்களை சுரண்டி ஈடுகட்டலாம் என்பது அமெரிக்காவின் கனவு. ஆனால் சீனா அவ்வளவு லேசாக விடுவதாக இல்லை. மிகப் பெரிய காண்ட்ராக்ட்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்கே சென்று விடுகின்றன. பக்கத்து நாடாக இருப்பது டென்டரை குறைந்த விலைக்கு எடுக்கவும் ஏதுவாகிறது.

அமெரிக்கா இவ்வளவு பொருளாதாரத்தையும் உயிரையும் இழந்தும் பகரமாக குறிப்பிடும்படியாக எதையும் திரும்ப பெற முடியவில்லை. ஆனால் சீனா எந்த சிரமமும் இல்லாமல் ஒப்பந்தங்களை அடுத்தடுத்து போட்டு வருகிறது. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஃபைஜ் ரஹ்மான்!

//மாஷா அல்லா எல்லா புகழும் அல்லாவிற்கே.. INSHA ALLAH, VERY SOON EGYPT GO TO REACH GOOD LEVEL//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

அய்யோ!பாவம் எகிப்தியர்கள்.

நீங்கதானே வாக்குகள் அடிப்படையில் பங்கீடு வேண்டுமென்று பதிவு போட்டது:)

ராஜ நடராஜன் said...

சுற்றுலாத்துறையும்,அமெரிக்க டாலரிலும்,வெளிநாட்டில் பணிபுரியும் எகிப்தியர்களால்தான் எகிப்திய ஆட்சி முறையே இயங்குகிறது.

முதலாவதாக சுற்றுலாவை இழுத்து மூடி விட்டால் வெளங்கிடும் எகிப்து.

Anonymous said...

என்ன சுவனம், கொள்கையில்லாத ஆளா இருக்கே ! சவுதியப் புகழுறே, ஆனா இஸ்ரேலுக்கு எதிரா எழுதுறே! சவுதியப் புகழுறே இஹ்வான் ஜெயிச்சத விரும்புறே. சவுதியப் புகழ்ந்தா, முபாரக்கையும் அவரது வழி வந்த ஷஃபீக்கையும் அல்லவா நீ ஆதரிக்கனும். ஒன்னுமே புரியல்ல‌

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//சுற்றுலாத்துறையும்,அமெரிக்க டாலரிலும்,வெளிநாட்டில் பணிபுரியும் எகிப்தியர்களால்தான் எகிப்திய ஆட்சி முறையே இயங்குகிறது.

முதலாவதாக சுற்றுலாவை இழுத்து மூடி விட்டால் வெளங்கிடும் எகிப்து.//

சுற்றுலாத் துறையை இழுத்து மூடி விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. மது, மாது என்பதை குறியாக சுற்றுலாப் பயணி என்ற போர்வையில் அனுபவிக்க வரும் மேலை நாட்டவர் இனி வேறு நாடுகளை நாட வேண்டி வரும். தவறான வழியில் பணம் ஈட்டி அரசை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? நம் தமிழ்நாட்டில் இந்த அம்மா இலவசங்களை வாரி இறைத்து விட்டு அதற்கு பகரமாக அந்த ஏழையிடம் டாஸ்மார்க் கடை மூலமாக டபுளாக அள்ளுகிறது. இது ஆரோக்கியமான செயலா?

மேலும் வெளி நாட்டவர் அதிகம் வருவது எகிப்தில் பிரமிடுகளை பார்க்கவும் பாரோ மன்னர்களின் நாகரிகங்களை கண்டுகளிக்கவுமே வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து வரத்தானே செய்வார்கள். அடுத்து நம் இந்தியாவைப்போல் வெளி நாடுகளில் வசிக்கும் எகிப்தியர்கள் மாதா மாதம் அனுப்பும் பணத்தை கொண்டே நாட்டை ஸ்திரப்படுத்தலாம். அநாவசிய செலவுகளை குறைத்தாலே போதுமானது. பார்ப்போம் எப்படி ஆட்சி செல்கிறது என்று.

suvanappiriyan said...

அனானி!

//என்ன சுவனம், கொள்கையில்லாத ஆளா இருக்கே ! சவுதியப் புகழுறே, ஆனா இஸ்ரேலுக்கு எதிரா எழுதுறே! சவுதியப் புகழுறே இஹ்வான் ஜெயிச்சத விரும்புறே. சவுதியப் புகழ்ந்தா, முபாரக்கையும் அவரது வழி வந்த ஷஃபீக்கையும் அல்லவா நீ ஆதரிக்கனும். ஒன்னுமே புரியல்ல‌//

'என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகனுக்கு மாமனார்' அப்படீன்னா இரண்டு பேருடைய உறவு என்ன என்று கண்டுபிடித்து விட்டால் நீ கேட்டதுக்கு விடை கிடைச்சுடும் அனானி. முயற்சி பண்ணி பார்க்கவும். :-)

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//அய்யோ!பாவம் எகிப்தியர்கள்.//

ரொம்பவும் பரிதாபப்படாதீங்க.... ஆச்சரியப்படும் அளவுக்கு இவர்களின் ஆட்சி இருக்கும். முதலில் அமெரிக்கா மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.

//நீங்கதானே வாக்குகள் அடிப்படையில் பங்கீடு வேண்டுமென்று பதிவு போட்டது:)//

கொடுத்தால் நல்லதுதான். அதிலும் இவர்கள் பாதிக்கு மேல் பிரதிநிதித்துவம் பெற்றதையும் கவனியுங்கள்.

Anonymous said...

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

விண்ணிற்கு அக்னி போன்ற ஏவுகணைகளை அனுப்புவதை விட, ஒவ்வொருவரது வீட்டிலும் கழிப்பறையை அமைப்பது தான் முக்கியம். சுகாதாரத்தை தவிர்த்து விட்டு, ஏவுகணைகளை அனுப்புவதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஒவ்வொருவரது வீட்டிலும் கழிப்பறையை ஏற்படுத்தித் தருவது தான் அரசுக்கு இப்போதுள்ள மிகப்பெரிய சவால்; இப்பிரச்னையை எப்படி சமாளிப்பது என, நாள் ஒன்றுக்கு நான் 18 மணி நேரம் சிந்திக்கிறேன்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி கழிப்பறை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது, நாட்டில் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போலவே, பொதுநல நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டது 99 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், ராணுவத்துக்கு இரண்டு மடங்கு அதாவது, 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும் என, நான் கூறவில்லை. அதே நேரத்தில், பொது நலத்திற்கும் அதே அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!சுற்றுலா வருபவர்களுக்கு அவர்களது நாட்டில் கிடைக்காத மதுவா?மாதுவா?எகிப்திற்கு செல்பவர்களின் கவனம் எல்லாம் நாகரீக தொட்டில்களில் ஒன்றான எகிப்தின் பிரமிடும்,பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொன்னவைகளுக்கு ஆதாரங்கள் தேடுவதும்,எகிப்திய இசை,ஒபேரா போன்றவற்றோடு அவர்களது வழக்கமான சூரியக்குளியலையும் அனுபவிப்பதே.

இஸ்லாமிய சகோதர கட்சி வென்றாலும் கூட அதற்கு கிட்டத்தட்ட நிகரான எதிர் அணி வாக்குகளையும் கவனியுங்கள்.இஸ்லாமிய மத சம்பிரதாயங்களோடு மேற்கத்திய நடை,உடை பாவனைகள்,டீ,குக்கா,முக்கியமாக ஜெர்மன் மெர்சிடிஸ் கார்களை மட்டுமே எகிப்தியர்கள் விரும்புகிறார்கள்:)

எப்படியோ சர்வாதிகாரம் என்ற படுகுழியிலிருந்து எழும்பி மத அரசியல் பாதாளத்தில் எகிப்தியர்கள் விழுந்து விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

வளைகுடா நாடுகளின் அழுத்தங்கள்,அமெரிக்காவின் மூக்கு நுழைப்பின்றி எகிப்திய அரசியலா?சொப்பனம்தான் போங்க.

மக்கள் தீர்ப்பை மதித்தாலும் கூட இன்னும் கொஞ்சம் அடி வாங்கினால் சரியான ஜனநாயக பாதைக்கு எகிப்தியர்கள் வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
மிஸ்ரியில் முர்ஷியின் ஆட்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷஃபி!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
மிஸ்ரியில் முர்ஷியின் ஆட்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//எப்படியோ சர்வாதிகாரம் என்ற படுகுழியிலிருந்து எழும்பி மத அரசியல் பாதாளத்தில் எகிப்தியர்கள் விழுந்து விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

வளைகுடா நாடுகளின் அழுத்தங்கள்,அமெரிக்காவின் மூக்கு நுழைப்பின்றி எகிப்திய அரசியலா?சொப்பனம்தான் போங்க.

மக்கள் தீர்ப்பை மதித்தாலும் கூட இன்னும் கொஞ்சம் அடி வாங்கினால் சரியான ஜனநாயக பாதைக்கு எகிப்தியர்கள் வந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.//

பாதாளத்தில் விழுந்ததாக எதை வைத்து சொல்கிறீர்கள்? தாலிபான்களைப் போல் தீவிரம் காட்டாமல் சவுதியைப் போல் கல்வி, அறிவியல், போன்றவற்றில் மேற்கத்தியர்களின் உதவியைப பெற்று இஸ்லாத்தையும் இழந்து விடாமல் பீடு நடை போட முடியுமே! அவர்களின் ஆட்சியையே பார்க்ககாமல் படுகுழியில் விழுந்ததாக சொல்வது நடுநிலையாளர்களின் கூற்று அல்லவே!

suvanappiriyan said...

தர்மபுரி: மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாரே என்று விபரீதமாக யோசித்த ஒரு பெண், தனது மகள் என்றும் கூட பாராமல் டானிக்கில் விஷத்தைக் கலந்து கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அந்தக் கொடுமைத் தாயாரையும், அவருடைய மருமகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வாசிக்கவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் குமார். 25 வயதான இவருக்கும், வேடியூர் கிராமத்தைச் சேர்ந்த காசி, உமா தம்பதிகளின் மகளான 21 வயது லட்சுமிக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

காசி ஏற்கனவே இறந்து விட்டார். உமா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவரை அடிக்கடி குமாரும், லட்சுமியும் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அப்போது உமாவுக்கும், மருமகன் குமாருக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டு விட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்தனர்.

இந்த கள்ள உறவு நிரந்தரமாக வேண்டும் என்று உமா நினைத்தார். அதற்கு தனது மகள் இடையூறாக இருப்பதாக அவர் கருதினார். இதையடுத்து மகளைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்தார், இதை மருமகன் குமாரிடம் கூறினார்.

இதைத் தொடர்நது குமார் ஒரு டானிக்கை வாங்கி வந்தார். அதில் விஷத்தைக் கலந்து விட்டனர். மூலிகை டானிக், உடம்பு சத்து பிடிக்கும் என்று கூறி அந்த டானிக்கை மகளுக்கு கொடுத்துள்ளார் உமா. அதை வாங்கி உமா குடித்தார். அப்போது அங்கு வந்த குமாரின் தாய், தந்தையும், தங்களுக்கும் கொடுக்குமாறு கூறி வாங்கிக்குடித்துள்ளனர். டானிக்கை குடித்த சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து மூன்று பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமாரின் மனைவி லட்சுமி மரணமடைந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் லட்சுமியின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் குமாரையும், மாமியார் உமாவையும் பிடித்து விசாரித்தனர். அதில் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மருமகனுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, தனது சுகத்திற்காக பெற்ற மகளை விஷம் கொடுத்துக் கொன்ற உமாவின் செயல் அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://tamil.oneindia.in/news/2012/06/25/tamilnadu-mother-arrested-killing-her-daughte-156372.html

suvanappiriyan said...

புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் T3 ஓய்விடத்திலிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தார் அந்த வயதான பெண்மணி. வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வரிவரியாக சுருக்கங்களை அவரது தோலில் ஏற்றியிருந்தது. பலவித நாடுகளிலிருந்து வந்த/செல்லும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு நடுவே இந்தப் பெண்மணி எங்கே பயணம் செய்யக் காத்திருக்கிறார்? அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என்ன? பார்ப்போமா?


“அப்பாடி…. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா, இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்….

ஆச்சு, ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான் ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.

இப்படி ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.

அவனும் அங்கே இருந்தே, இன்டர்னெட் மூலமா நான் இருந்த எங்க சொந்த வீட்டை விக்கிறதுக்கும், பாஸ்போர்ட், விசா, எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, என்னை அழைச்சிட்டுப் போக ஒரு மாசம் முன்னாடி வந்தான். எல்லா வேலையும் கடகடன்னு முடிச்சு, இதோ இங்கே ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு, அடுத்து நியூயார்க் தான்.”

அவரோட எண்ண ஓட்டத்தை தடை செய்யறமாதிரி, பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர், அந்தப் பெண்மணியை “மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன், உள்ள போய் போர்டிங் பாஸ் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வரேன்னு போயிருக்கான், இப்ப வந்துடுவான்”_னு சொல்ல, அவர் விடாம “உங்க பையன் பேர் சொல்லுங்கம்மா, நான் விசாரிச்சு சொல்றேன்னு” பேர் கேட்டுட்டு உள்ளே போனார்.

உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து வந்த போலீஸ்காரர் முகத்தில் ஒரு வித அதிர்ச்சியும், அயர்ச்சியும். ”ஏம்மா, நல்லாத் தெரியுமா, உங்க பையன் உங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காரான்னு?, ஏன்னா அவர் ஒரு மணி நேரம் முன்பு கிளம்பின நியூயார்க் விமானத்திலே போய்ட்டாரே…” ன்னு சொன்னதைக் கேட்ட பெண்மணிக்கு மாத்திரமல்ல, நமக்கும் அதிர்ச்சி.

அந்த வயதான பெண்மணிக்கு உட்கார்ந்திருந்தாலும், தரை கீழே நழுவி உள்ளே விழுந்துவிட்டது போன்ற உணர்வு. “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க, வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்னு” சொல்லியிருக்கார்.

இத்தனை வருடம் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கி விட்ட மகன் பணத்திற்காக இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்காத அந்த பாட்டி அதிர்ச்சியில் அங்கேயே மயங்கிச் சரிந்தார். செல்வதற்கு வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாது என்ன செய்ய முடியும் அந்த மூதாட்டியால்?

பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது. வடக்கு தில்லியில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் இருந்த ஒரு பெண்மணிக்கு நேர்ந்த கதி இது. விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள். இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.
=http://venkatnagaraj.blogspot.com/2012/06/blog-post_25.html

Seeni said...

nllla thaval/ visayam

suvanappiriyan said...

சகோ சீனி!

//nallla thakhaval/ visayam

நல்ல தகவல்/ விஷயம்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

லண்டன் : பிரிட்டனில் வசித்த இலங்கை தமிழர், இளைஞர்கள் தாக்கியதில் பலியானார். இலங்கையை சேர்ந்தவர் பொன்னுதுரை நிமலராஜா,41. இவரை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து தாக்கியதால், 93ம் ஆண்டு தஞ்சம் கோரி, ஜெர்மனியில் குடிபெயர்ந்தார். இவருடைய மனைவி மதனிகா. இரண்டு குழந்தைகள் உள்ளனர். தங்கள் குழந்தைகள் ஆங்கிலப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையால், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். கடந்த 9ம் தேதி லீசெஸ்டர் பகுதியில் ஏற்பட்ட மோதலில், 13 வயது முதல் 15 வயது வரையுள்ள ஆறு பையன்களும், 14 வயதுள்ள ஒரு பெண்ணும் நிமலராஜாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிமலராஜா சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் இறந்து விட்டார். இது தொடர்பாக லீசெஸ்டர் பகுதி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஏழு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் ஏழு பேரும் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த கொலைக்குப் பின்னணி குறித்து நிமலராஜாவின் மனைவி மற்றும் பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-Dina malar
25-06-2012

Anonymous said...

கொழும்பு:இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்புப் படையில், முன்னாள் விடுதலைப் புலிகள், 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, மே மாதம், அரசு படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. போர் முடிந்ததும் சரணடைந்த, 11 ஆயிரம் விடுதலைப் புலிகள், மறுவாழ்வு முகாமில் அடைக்கப்பட்டனர். மறுவாழ்வு முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற, 1,000 முன்னாள் விடுதலைப் புலிகள், உள்நாட்டு பாதுகாப்புப் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட போது, சிங்கள பகுதிகளில் ராணுவத்தினருக்கு உதவியாக உள்நாட்டு பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, இந்த படைக்கு தமிழர் பகுதியிலிருந்து ஆட்களை தேர்வு செய்வதற்காக, 2,000 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் விடுதலைப் புலிகள் ஏற்கனவே ஆயுத பயிற்சிகள் பெற்றிருப்பதால், அவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பகுதியிலிருந்து உள்நாட்டு பாதுகாப்புப் படைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Anonymous said...

முஹமத் மோர்சி உண்மையில் அமெரிகாவின் கை ஆளாக இருக்கலாம் என எகிப்தில் பலர் கருதுகின்றனர். அவரின் பின்புலம் சர்ச்சைக்கு உள்ளானவை. எகிப்தில் இருந்து என்னோட தொடர்பு கொண்ட ஒரு வலைப்பதிவர் இந்த தேர்தல் முடிவுகள் பற்றி மிகவும் நொந்துக் கொண்டார். மீண்டும் அமெரிக்க இன்னொரு கைப்பாவையை நிறுவி உள்ளதாக அவர் கருதுகின்றார். என்ன நடக்கின்றது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

suvanappiriyan said...

திரு இக்பால் செல்வன்!

//முஹமத் மோர்சி உண்மையில் அமெரிகாவின் கை ஆளாக இருக்கலாம் என எகிப்தில் பலர் கருதுகின்றனர். அவரின் பின்புலம் சர்ச்சைக்கு உள்ளானவை. எகிப்தில் இருந்து என்னோட தொடர்பு கொண்ட ஒரு வலைப்பதிவர் இந்த தேர்தல் முடிவுகள் பற்றி மிகவும் நொந்துக் கொண்டார். மீண்டும் அமெரிக்க இன்னொரு கைப்பாவையை நிறுவி உள்ளதாக அவர் கருதுகின்றார். என்ன நடக்கின்றது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். //

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக பணியாற்றும் எகிப்தியரிடம் இது பற்றி கேட்டேன். 'அமெரிக்காவில் படித்து அவரது குடும்பத்தவர் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் அவருக்கு கீழே உள்ள அங்கத்தினர்களை மீறி செயல்பட முடியாது. அமெரிக்கா உதவியோடு சில நல்ல விஷயங்களை தனது நாட்டுக்காக முர்ஷியால் என்றிருந்தால் அதையும் வரவேற்போமே!

உங்களைப்போல் நானும் அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தே வருகிறேன். பார்ப்போம் முடிவு எப்படி இருக்கிறதென்று.

suvanappiriyan said...

திரு பொன் முத்துக் குமார்!

//தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் பூமியிலிருந்து ஒருவரை தன் விருப்பத்துக்கு மாறாய் வெளியேறச்சொல்வது வன்மையான கண்டனத்துக்குரிய அப்பட்டமான தாலிபானிஸ பார்வை.//

நான் ஒரு இஸ்லாமியன் என்று சொன்னால் குர்ஆனை விளங்கியிருக்க வேண்டும். முகமது நபியின் கட்டளைகளை முடிந்த வரை எனது வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டும். இதை எல்லாம் நான் விரும்பாவிட்டால் எனக்கு குர்ஆன் மீது அது இறை வாக்குதான் என்பதில் நம்பிக்கை இல்லா விட்டால் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதுதான் முறை. அதாவது பிறந்த ஊரை காலி செய்ய நான் சொல்லவில்லை. கொள்கையை மாற்றி கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடலாம்.

ஆனால் பாகிஸ்தானில் நடப்பதோ அது போன்ற ஒரு நிகழ்வு அல்ல. முதலில் இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதா என்பதே விவாதத்திற்குரிய விஷயம். அடுத்து அப்படியே அது தடுக்கப்பட்டிருந்தாலும் அதை ஒரு இஸ்லாமிய அரசாங்கம்தான் சட்டப்படி தடை செய்ய முடியும்.

தாலிபான்களைப் போன்ற ஒரு சில குழுக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு கண்டபடி ஆட்களை தீர்த்துக் கட்டுவது வன்மையான கண்டனத்தக்குரியது. இஸ்லாமும் இதைச் சொல்லவில்லை. அரபு மதரஸாக்களில் சில பொய்யான நபி மொழிகளை உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது. இதற்கு சில இளைஞர்களும் பலியாகிவிடுகின்றனர். முதலில் குர்ஆன் ஆதாரபூர்வமான நபி மொழிகளைத் தவிர மற்றவர்கள் எழுதியதை பாடமாக வைக்க அரசு தடை போட வேண்டும். இந்தியாவிலும் மத்ரஸாக்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்தக்கள் பாடமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. தற்பொது தமிழகத்தில் அதுபோன்ற பாடங்களை எல்லாம் நீக்கச் சொல்லி போராடி வருகிறோம். சில மதரஸாக்களில் தவறை உணர்ந்து நீக்கியும் இருக்கிறார்கள். எனவே தவறு முல்லாக்களிடம்தானே யொழிய குர்ஆனில் இல்லை. தவறு தாலிபான்களிடம்தானே யொழிய முகமது நபியிடம் இல்லை.

suvanappiriyan said...

திரு முனாவர்!

//”33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ”
ஆகவே பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணானது. இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மனிதர்களுமே அல்லாஹ்வின் கட்டளையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆகவே, எந்த பெண்ணாக இருந்தாலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது சரியா என்று சிந்தியுங்கள்.//

அதற்கு முன்னால் உள்ள வசனத்தை விட்டு விட்டு பாதியை மட்டும் குறிப்பிடுகிறீர்களே! அந்த வசனம் முகமது நபியின் மனைவியர்களைப் பார்த்து சொல்லப்பட்ட வசனத்தை ஏன் பொதுவில் வைக்கிறீர்கள்? பெண்கள் படிப்பதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ இஸ்லாம் தடை சொல்லவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடங்கள் என்றும் சொல்லவில்லை. பல போர்க்களங்களில் பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். முகமது நபி காலத்திலேயே பள்ளியில் தொழுதிருக்கிறார்கள். கல்வியை கற்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். ‘ஒட்டகப் போர்’ கேள்விப்பட்டிருப்பீர்களே! முகமது நபியின் மனைவி அன்னை ஆயிஷா தலைமையேற்று நடத்திய போரல்லவா அது. ஒரு போருக்கே பெண்கள் தலைமை தாங்கியிருக்கும் போது பெண்களை வீட்டில் அடைந்து கிடக்க எப்படி சொல்கிறீர்கள்?

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இறைவனே அறிந்தவன்.// அப்படியென்றால் என்ன?//

இஸ்லாத்தில் ஒரு சந்தேகமான விஷயத்தில் நான் ஒரு முடிவை எடுப்பதாக கொள்வோம். நான் சிந்தித்து எடுத்த முடிவு தவறாகவும் இருக்கலாம். சரியாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை என்ன என்பதை உங்களையும் என்னையும் படைத்த இறைவன் அறிவான். எனவே தான் இசை என்று வரும்பொது ஒரு நபிமொழி ஆதரிக்கிறது: மற்றொரு நபிமொழி தடுக்கிறது. இதில் நம் சிந்தையை மயக்காமல் அதற்கு அடிமையாக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒருவன் இசையை ஆபாசமில்லாமல் அளவோடு ரசிக்கலாம். அதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒருகால் என் முடிவு தவறாகவும் இருக்கலாம். உண்மையை இறைவனே அறிந்தவன் என்பதற்காகவே அவ்வாறு சொன்னேன்.

suvanappiriyan said...

கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தின் முதல் அதிபராக இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தி எகிப்தின் முன்னாள் ஆட்சியாளர் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், இஸ்ரேலுக்கு கடுமையான கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கிற்கு, முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தி கேட்டவுடன் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது.

ஜூன் முதல் வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதே முபாரக் உடல்நிலைக் குறித்து சந்தேகம் எழுந்தது. கடந்த வாரம் அவர் மரணித்துவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை மறுத்த ராணுவ அரசு முபாரக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது. முன்னர் நினைவிழந்திருந்த முபாரக், நினைவு திரும்பி கண்ணைத் திறந்துள்ளார் என்று ராணுவ அரசு அறிவித்தது. ஆனால், முர்ஸியின் வெற்றிச் செய்தியை கேட்டவுடன் அவரது இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்துடிப்பு தாறுமாறாக அதிகரித்துள்ளது என்று சிறை மருத்துவர்களை மேற்கோள்காட்டி அல் அஹ்ராம் கூறுகிறது.

இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் முர்ஸியின் வெற்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் பிள்ளைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு தோரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் பிள்ளைகளான ஜமால் முபாரக், அலா முபாரக் ஆகியோர் முர்ஸி வெற்றிப்பெற்ற செய்தியை கேட்டவுடன் அழுததாக தேசிய செய்தி ஏஜன்சி கூறுகிறது.

எகிப்தின் தேர்தல் முடிவை மதிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள போதிலும் அங்கு கடுமையான பீதி நிலவுவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஃவானுல் முஸ்லிமீனின் வெற்றி இஸ்ரேலுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலில் பிரபல பத்திரிகையான Yediot Aharonot உள்ளிட்ட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Yediot Aharonot பத்திரிகை திங்கள் கிழமை “Darkness in Egypt”(எகிப்தின் கறுப்பு தினம்) என்ற தலைப்புடன் வெளியானது. ஏறக்குறைய இதே கருத்துடனேயே இஸ்ரேலின் பெரும்பாலான பத்திரிகைகள் எகிப்து தேர்தலில் முர்ஸியின் வெற்றிக்குறித்த செய்திகளை வெளியிட்டன.

பிரபல பத்திரிகை ஒன்றில் அனலிஸ்டான Alex Fishman என்பவர் ‘நடைபெறப்போகும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இஸ்ரேல் தயாராக வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

மாரிவ் டைலி என்ற இஸ்ரேலி பத்திரிகை, ’புதிய மத்திய கிழக்கு உலகம் அஞ்சுவது நிதர்சனமாகியுள்ளது. இஃவானுல் முஸ்லிமீன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது’ என்று கதறி அழும் நோக்கில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் ஹாரட்ஸ் உள்ளிட்ட ஒரு சில பத்திரிகைகள், எகிப்து தேர்தல் முடிவை மதிப்பதாக கூறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டுள்ளன.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

எகிப்தில் சகோ.முர்ஷியின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படையில் சிறப்பாக அமைய துவா செய்கிறேன்.

இப்படித்தான்,
ஐநா மேற்பார்வையில் கோஃபி அன்னான் நடத்திய தேர்தலை அங்கீகரித்து ஆதரித்த அமெரிக்காவும் இஸ்ரேலும்... அத்தேர்தலில் இவர்களுக்கு பிடிக்காத ஹமாஸ் கட்சி அமோக மக்கள் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெற்ற உடன்... "இது செல்லாது... இது செல்லாது" என்று பாலஸ்தீன ஜனநாயகத்தையே சாகடித்து சிதைத்து விட்டனர்..!

அவ்வளவு வெறிகொண்ட இவர்கள் இனி இங்கே என்னவெல்லாம் செய்வார்களோ..?!?

இறைவன்தான் இனி அமெரிக்க இஸ்ரேலிய பகைவர்களிடம் இருந்து எகிப்தின் புதிய ஆட்சியாளர்களை காப்பாற்ற வேண்டும்..! ஆமீன்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இறைவன்தான் இனி அமெரிக்க இஸ்ரேலிய பகைவர்களிடம் இருந்து எகிப்தின் புதிய ஆட்சியாளர்களை காப்பாற்ற வேண்டும்..! ஆமீன்.//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!