Followers

Friday, June 29, 2012

அபு ஜிந்தால்- நாம் செய்ய வேண்டியது என்ன?



"கவலையே படாதீங்க! எல்லா பிரச்னையையும் ஒரு மூலையில தூக்கிப் போடுங்க! நான் ஜனாதிபதியாயிட்டா குப்பனும் சுப்பனும் டாட்டா பிர்லாவா மாறிடலாம். தீவிரவாதம் ஒழிக்கப்படும். பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்! நம்புங்க!"

________________________




பாகிஸ்தானின் கராச்சியை மையமாக வைத்து அபு ஜிந்தால் திட்டங்களை தீட்டியிருப்பதாகவும் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை பேரை அவன் தேர்வு செய்திருக்க முடியாது என்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். திட்டங்களை செயல்படுத்தி விட்டு பங்களாதேஷ் வழியாக சவுதி சென்று இத்தனை நாள் தங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரசும் இந்திய அதிகாரிகளோடு இவனது பாஸ்போர்டில் உள்ள பிரச்னையை வைத்து நம்மிடம் ஒப்படைத்துள்ளது. மதத்தின் பெயரை பயன்படுத்தி நாச வெலையில் ஈடுபட்ட இவனை போன்ற துரோகிகளை சவுதி பாரபட்சம் பார்க்காமல் இந்தியாவிடம் ஒப்படைத்திருப்பது பாராட்டக்குரியது. உண்மையான இஸ்லாத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்பதை இந்நிகழ்வு நமக்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது.



எனக்கு பழக்கமான பங்களாதேசை சேர்ந்த ஒருவன் அவன் நாட்டுக்கு செல்வதற்காக மும்பைக்கு டிக்கெட் எடுத்திருந்தான். நான் ஆச்சரியப்பட்டு 'நீ பங்காளி அல்லவா? எப்படி மும்பைக்கு டிக்கெட் எடுத்துள்ளாய்?' என்று கேட்டேன்.

சிரித்துக் கொண்டே 'மும்பையில் இறங்கி பிறகு பஸ்ஸில் திரிபுரா அல்லது அஸ்ஸாம் செல்வேன். அங்குள்ள காடுகளை தாண்டினால் எங்கள் நாடு பங்களாதேஷ் வந்து விடும். அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு சென்று விடுவேன்' என்றான் சர்வசாதாரணமாக.

ஆச்சரியத்தோடு நான் 'பாஸ்போர்ட் எப்படி எடுத்தாய்?' என்று கேட்டேன்.

"பணம் கொடுத்தால் இங்கிருந்தே எனக்கு இன்னொரு பாஸ்போர்டடை மும்பையில் எடுக்க முடியும்" என்றான். இந்த சம்பாஷணை நடந்து பல வருடங்களாகிறது. தற்போது அந்த நிகழ்வு ஞாபகம் வந்தது. வல்லரசாக துடிக்கும் ஒரு நாடு எல்லைப் புறத்தில் இவ்வளவு அசட்டையாக இருக்கலாமா?

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்களை இந்தியாவைக் காட்டி பயமுறுத்தி அடக்கி வைக்க அந்நாட்டு அரசு செயல்படுத்தும் பல தீவிரவாத செயல்களை நாம் அறிவோம். உதவிக்கு வர இஸ்ரேலும் அமெரிக்காவும் எப்போதும் தயாராகவே இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தரை மார்க்கத்தை சுற்றி இரும்பு வேலி அடைக்க ஏன் நிர்வாகம் முயல்வதில்லை. எத்தனையோ காரியங்களுக்கு பணத்தை தண்ணீராக செலவழிக்கும் அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயததில் ஏன் இவ்வளவு அசட்டையாக இருக்கிறது.




அடுத்து சில மதரஸாக்களில் இஸ்லாம் தவறாக கற்பிக்கப்படுகிறது. ஆதாரமில்லாத இஸ்லாமிய எதிரிகளால் எழுதப்பட்ட சில போலி ஹதீஸ்களை இளைஞர்களுக்கு இதுதான் இஸ்லாம் என்று போதிக்கப்படுகிறது. ஜிஹாதுக்கு தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. குர்ஆனின் வசனங்களுக்கும் தவறாக மொழி பெயர்ப்பை அந்த மாணவர்களின் மனதில் விதைக்கினறனர். இதற்கு சில கள்ள மார்க்க அறிஞர்களும் உடந்தை. இவற்றையும் முதலில் கண்டுபிடித்து அவ்வாறு தீவிரவாதத்தில் ஈடுபடும் மதரஸாக்களை பாகிஸ்தான் இழுத்து மூட வேண்டும். குர்ஆனையும் ஆதாரபூர்வமான ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்ட மதரஸாக்கள் உருவாக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் இவ்வாறு சில மதரஸாக்களில் முன்பு தவறான பாடத் திட்டங்கள் வைக்கப்பட்டிருந்தது. தவ்ஹீத் (வஹாபிகள்) வாதிகளின் தொடர் பிரச்சாரங்களால் அந்த பாடங்கள் தற்போது மத்ரஸாக்களில் போதிக்கப் படுவதில்லை. ஆனால் வட நாடுகளில் இன்றும் போதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று தவறான பாடத் திட்டங்களில் செயல்படும் மத்ரஸாக்களை இழுத்து மூடினாலே பல பிரச்னைகள் ஒழிய வாய்ப்புண்டு. மத்ரஸாக்களின் துணை இல்லாமலேயே இஸ்லாத்தை பலரும் அதன் தூய வடிவில் அறிந்து வருகின்றனர். நானும் கூட மதரஸா சென்று இஸ்லாத்தை தெரிந்து கொண்டவன் அல்ல. இந்தியா முழுமைக்கும் சீரான பாடத்திட்டத்தை இஸ்லாமிய அறிஞர்களான பி.ஜெய்னுல்லாபுதீன், ஜாகிர்நாயக் போன்றோரின் உதவி கொண்டு அரசு முறைப்படுத்த முயல வேண்டும்.

அடுத்து சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு குற்றவாளி பிடிபட்டால் அவனை உடன் தூக்கில் தொங்க விட்டால் அடுத்து எல்லை தாண்டி வருவதற்கு பலரும் யோசிப்பர். சவுதியில் பெரும் டிரக்குகளை சில ஆப்ரிக்க கொள்ளையர்கள் டிரைவர்களை கொலை செய்து விட்டு பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்கதையானது. மஃப்டியில் ஒரு மாதம் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் முடிவில் இரண்டு கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிறகென்ன....விசாரணை ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு தலை வெட்டப்பட்டது. உடலை பார்வைக்காக சில வாரங்கள் அந்த வழியிலேயே கட்டி தொங்க விட்டிருந்தனர். இதைப் பார்க்கும் எவருக்காவது திருட மனம் வருமா? அன்றிலிருந்து எந்த பிரச்னையும் இல்லாமல் டிரக்குகள் ஒழுங்காக சென்று வருகின்றன.

அஜ்மல் கசாபுக்கு அவனது குடும்பத்திற்கு பல லட்சங்கள் தருவதாக சொன்னதன் பேரிலேயே மும்பை வர ஒத்துக் கொண்டுள்ளான். அடுத்து அவனுக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என்பதும் இந்தியாவில் அவர்களை இந்த அளவு சுதந்திரமாக அனுமதித்தது யார் என்பதையும் உலகுக்கு தெரிவிக்க வேண்டும். குஜராத் எல்லையை அவர்கள் பயன்படுத்தியது எவ்வாறு? கடல் கண்காணிப்பில் இருந்த அதிகாரிகள் எப்படி இவ்வளவு பேர் அனுமதியின்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்? என்ற விபரங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும். மேலும் விசாரணைக் கைதிகளை மறைவில் வைத்து விசாரிக்காமல் பொதுவில் வைத்து விசாரித்தால் சில நாட்களிலேயே உண்மை வெளி வந்து விடும். போலீஸாரின் மிரட்டலுக்கு பயந்து தரும் வாக்கு மூலமாகவும் அது இருக்காது. பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குரு எவ்வாறு சிக்கவைக்கப் பட்டார் என்று முன்பு பல பதிவுகளில் பார்த்துள்ளோம். நம் நாட்டு அரசு தரும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை முதலில் இனம் காண வேண்டும். இதை எல்லாம் நேர்மையாக நடக்கும் சிதம்பரம் மனது வைத்தால் செயல்படுத்த முடியும். ஆனால் அதிகார வர்க்கம் இதை செயல்படுத்த முன் வருமா? என்பது கேள்விக் குறியே!

Pointing out to the Indian nationals nabbed in the Mumbai terror attacks, Mr. Malik said India should look inwards instead of always pointing the accusing finger at Pakistan. “Zabiuddin Ansari is an Indian.” When Ansari did everything in India, he questioned why Pakistan was being held solely responsible for the Mumbai terror attacks. “That means your agencies failed to control their citizens. Please look at your system also.’’
http://www.thehindu.com/news/national/article3576826.ece

சிதம்பரம் இந்த கைதுக்கு பிறகு பாகிஸ்தானை குறை சொன்னதற்காக அந்நாட்டு அமைச்சர் மாலிக் கொடுத்த பேட்டியைத்தான் நாம் மேலே பார்க்கிறோம். நம் உள் நாட்டு பாதுகாப்பிலும் பல குறைபாடுகள் உண்டு. அதையும் சரி செய்ய வேண்டும். அடுத்து பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், போன்ற நாடுகளின் எல்லையை கண்காணிப்பதில் இன்னும் சிரத்தை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு மத முத்திரையை குத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எந்த மதமும் இல்லை. அஜ்மல் கசாபை எப்படி பார்க்கிறோமோ அதே நிலையில்தான் சாது பிரக்யாசிங்கையும் நாம் பார்க்க வேண்டும். நாட்டு நலன் முக்கியமாக்கப்பட்டு குற்றவாளிகள் நமது சொந்தங்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கொண்டு விடும் பக்குவம் நமக்கு வர வேண்டும். இந்தியாவை சிறந்த தேசமாக பார்க்க நினைக்கும் அனைவரும் இதை கடைபிடித்தே ஆக வேண்டும். இத்தகைய தேசபக்தி மிக்க மக்களாக நம் அனைவரையும் எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!!

23 comments:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

/////சவுதியில் பெரும் டிரக்குகளை சில ஆப்ரிக்க கொள்ளையர்கள்//////// "அடேங்கப்பா திருட்டு எண்ணம் கருப்பு ஆப்பிரிக்கனுக்கு மட்டும் தான் வரும் என்று பஞ்ச் வச்சிங்கப் பாருங்க" இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஒருவர்(ஒரே ஒருவர்) ஓடி வருவார் பாருங்கள்.

ராஜ நடராஜன் said...

பங்களாதேசிகளின் வாழ்க்கைத்தரம் வளைகுடா நாடுகளில் கூட மோசமாகவே இருக்கிறது.பங்களாதேசில் சொல்லவே வேண்டாம்.எனவே நல்வாழ்வை நோக்கி மனிதன் நகர்வது இயல்பானது.அதனால் ப்ங்களாதேசுடன் ஒப்பிடும் போது இந்தியா பசுமையாக தோன்றுவதால் எல்லை கடந்து இந்தியாவில் நுழைவது இயல்பான ஒன்றே.ஆனால் இது குறித்து இந்தியா அலட்டிக்கொள்ளாத அறிக்கைகள் மட்டும் விடுவது ஆச்சரியம்தான்.

சவுதி கொஞ்சம் திருந்தி விட்ட மாதிரி தெரிகிறதே:) 9/11 முந்தைய கால கட்டத்தின் மொத்த குத்தகை தீவிரவாதத்தின் பொருளாதார உதவி சவுதியிலிருந்தே வந்தது.ஒருவேளை ஒசாமா பின்லேடன் சார்ந்த குழுவினரால் சவுதி அரசுக்கும் கெட்டபெயர் வந்திருக்கலாம்.அல்லது இடது பக்கம் போனால் என்ன வலது பக்கம் போனால் என்ன நம்மை கடிக்காமல் இருந்தால் சரியென்று பண உதவிகளை செய்து விட்டு ஒதுங்கியும் கூட இருந்திருக்கலாம்.

இஸ்லாமிய தீவிரவாதம் தமிழகத்தை விட கேரளாவின் ஒரு பகுதியில் தீவிரவாதமாக இருந்தது.இருக்கிறது.சேட்டன்கள் உலகின் எந்த மூலைக்கும் செல்வதால் பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை.

குற்றங்களுக்கு தலையை வெட்டுவது ஒரு புறம் உடனடி நிவாரணம் என்ற போதிலும் மனித உரிமையாளர்களால் இன்னும் காட்டுமிராண்டித்தனமாகவே கருதப்படுகிறது.எத்தனை மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்?ஆனால் குற்றங்கள் முழுதாக அழிந்ததா என்றால் இல்லையே!எனவே மரணதண்டனை தலைவலிக்கு தைலம் பூசுவது மட்டுமே.

ஆனாலும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது வளைகுடா நாடுகளில் சட்டங்கள் ஓரளவுக்கு பாரபட்சமின்றியும்,தயவு தாட்சண்யம் பார்க்காமல் செயல்படுத்தப்படுவது பாராட்டத்தக்கதே.

பகிர்வுக்கு நன்றி.

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஷஃபி!

//"அடேங்கப்பா திருட்டு எண்ணம் கருப்பு ஆப்பிரிக்கனுக்கு மட்டும் தான் வரும் என்று பஞ்ச் வச்சிங்கப் பாருங்க" இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஒருவர்(ஒரே ஒருவர்) ஓடி வருவார் பாருங்கள். //

திருடுவதில் வெள்ளயைன் என்ன கருப்பன் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். துரதிர்ஷ்டவசமாக அரபு நாடுகளில் இது பொன்ற திரட்டுக்களில் துணிந்து இறங்குவது ஆப்ரிக்கர்களே! சில நேரங்களில் உண்மை கசக்கவே செய்கிறது. :-)

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//சவுதி கொஞ்சம் திருந்தி விட்ட மாதிரி தெரிகிறதே:) 9/11 முந்தைய கால கட்டத்தின் மொத்த குத்தகை தீவிரவாதத்தின் பொருளாதார உதவி சவுதியிலிருந்தே வந்தது.ஒருவேளை ஒசாமா பின்லேடன் சார்ந்த குழுவினரால் சவுதி அரசுக்கும் கெட்டபெயர் வந்திருக்கலாம்.அல்லது இடது பக்கம் போனால் என்ன வலது பக்கம் போனால் என்ன நம்மை கடிக்காமல் இருந்தால் சரியென்று பண உதவிகளை செய்து விட்டு ஒதுங்கியும் கூட இருந்திருக்கலாம்.//

சவுதி தீவிரவாதத்துக்கு என்றுமே ஆதரவு அளித்ததில்லை. அரசு இரும்பு கரம் கொண்டு அல்கொய்தா தீவிரவாதிகளை முழுவதுமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒழித்துக் கட்டியது. இறந்த இளவரசர் நாய்ஃப்பின் பங்கு இதில் கணிசமானது. இஸ்லாமிய வளர்ச்சிக்கு சவுதி அரசு பல உதவிகளை செய்து வருவதை மறுப்பதற்கில்லை. ஆனால் தீவிரவாதத்தையும் இஸ்லாமிய வளர்ச்சியையும் அவர்கள் இரு வேறு துருவங்களாகவே பார்க்கின்றனர்.


//குற்றங்களுக்கு தலையை வெட்டுவது ஒரு புறம் உடனடி நிவாரணம் என்ற போதிலும் மனித உரிமையாளர்களால் இன்னும் காட்டுமிராண்டித்தனமாகவே கருதப்படுகிறது.எத்தனை மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்?ஆனால் குற்றங்கள் முழுதாக அழிந்ததா என்றால் இல்லையே!எனவே மரணதண்டனை தலைவலிக்கு தைலம் பூசுவது மட்டுமே.//

மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது சவுதியில் குற்றங்கள் மிகவும் குறைந்து காணப்படுவது கடுமையான தண்டனைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நான் பார்க்கிறேன். ஆனால் நம் நாட்டில் முதலில் காவல்துறையை புனிதப்படுத்தி விட்டு இந்த வேலையை செய்ய வேண்டும். அந்த அளவு அழுகியிருக்கிறது காவல் துறை.

//ஆனாலும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது வளைகுடா நாடுகளில் சட்டங்கள் ஓரளவுக்கு பாரபட்சமின்றியும்,தயவு தாட்சண்யம் பார்க்காமல் செயல்படுத்தப்படுவது பாராட்டத்தக்கதே.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

Anonymous said...

ஆமதாபாத் : குஜராத்தின் நரோடா பாட்டியாவில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 97 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஜோட்ஸ்னா யாக்னிக் அறிவித்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 62 பேரில் 3 பேர் இன்று ஆஜராகததால் இவ்வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 62 குற்றவாளிகளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-Dinamalar
30-06-2012

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

//அஜ்மல் கசாபை எப்படி பார்க்கிறோமோ அதே நிலையில்தான் சாது பிரக்யாசிங்கையும் நாம் பார்க்க வேண்டும். நாட்டு நலன் முக்கியமாக்கப்பட்டு குற்றவாளிகள் நமது சொந்தங்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கொண்டு விடும் பக்குவம் நமக்கு வர வேண்டும்.//
பொதுவான மக்களுக்கு புரியவேண்டிய முத்திரை வார்த்தைகள்..தரமான கட்டுரை ...நல்ல முயற்சி

புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர்!

//பொதுவான மக்களுக்கு புரியவேண்டிய முத்திரை வார்த்தைகள்..தரமான கட்டுரை ...நல்ல முயற்சி

புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

தீவிரவாதத்தை ஒடுக்கும் அளவிற்கு பாரபட்சமின்றி சவுதி எடுத்த முடிவுக்கு ஒரு சலாம். எந்த மதமாகிலும் அதில் இவனைப்போல் துரோகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,இந்தியாவிலும் இனங்கண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டால் காவி தீவிரவாதிகளும் ஒழிக்கப் படலம்.

இனியவன்..

Unknown said...

தீவிரவாதத்தை ஒடுக்கும் அளவிற்கு பாரபட்சமின்றி சவுதி எடுத்த முடிவுக்கு ஒரு சலாம். எந்த மதமாகிலும் அதில் இவனைப்போல் துரோகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,இந்தியாவிலும் இனங்கண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டால் காவி தீவிரவாதிகளும் ஒழிக்கப் படலம்.

இனியவன்..

khaleel said...

நல்ல பதிவு.
எடுத்ததேர்கேல்லாம் சவூதியை கேலி மற்றும் திட்ட செய்யும் ஊடகங்களும், வலை பதிவர்களும் இதை பற்றி ஒரு வார்த்தை குட சொல்லாமால் இருப்பது ஆச்சர்யம் தான்.

suvanappiriyan said...

சகோ கலீல்!

//நல்ல பதிவு.
எடுத்ததேர்கேல்லாம் சவூதியை கேலி மற்றும் திட்ட செய்யும் ஊடகங்களும், வலை பதிவர்களும் இதை பற்றி ஒரு வார்த்தை குட சொல்லாமால் இருப்பது ஆச்சர்யம் தான்.//

ஏதாவது ஒரு சிறிய தவறு சவுதியில் நடந்து விட்டால் போட்டி போட்டிக் கொண்டு பதிவுகளை எழுதும் பல பதிவர்கள் தற்போது வாய் மூடி இருப்பதை ஆச்சியத்தோடு பார்க்கிறோம். ஊடகங்களும் இதை பெரிது படுத்தாமல் இரப்பதை கவனியுங்கள். ஏதோ இணையம் இருப்பதால் சில உண்மைகள் மக்களைப் போய் அடைகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ இனியவன்!

//தீவிரவாதத்தை ஒடுக்கும் அளவிற்கு பாரபட்சமின்றி சவுதி எடுத்த முடிவுக்கு ஒரு சலாம். எந்த மதமாகிலும் அதில் இவனைப்போல் துரோகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,இந்தியாவிலும் இனங்கண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டால் காவி தீவிரவாதிகளும் ஒழிக்கப் படலம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை..

கி.பி.எட்டாவது நூற்றாண்டில் ஆரிய மதத்தின் இரு பிரிவுகளான சைவ வைஷ்ணவ மதங்கள் வலுப்பெற்றபோது சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவமும் வைணவமும் இணைந்து சமண புத்த மதங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இன்று காணப்படும் பகவதிக் கோயில் தென்னாட்டில் சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியதாகும். அக்கோயிலில் இருந்த ‘பத்மாவதி’ சிலையை பகவதி சிலையாக மாற்றி இந்துக்கள் வசப்படுத்தி விட்டனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். (மாத்ருபூமி வார இதழ் வாசகர் பகுதி 1989 ஜூலை 2-8) அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதுபோன்று நாகர்கோவிலில் உள்ள ‘நாகர் அம்மன்’ கோயில் ஒரு சமணக் கோயிலாகும். கி.பி.1589-க்குப் பின் இது இந்துக் கோயிலாக மாற்றப்பட்டது. அக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் குணவரே பண்டிதர் என்றும் கமல வாகன பண்டிதர் என்று இரு சமண அறிஞர்கள் இருந்து வந்தனர். இந்துக் கோயிலாக மாற்றப்பட்டதும் துளு நாட்டைச் சார்ந்த போற்றிமார் (பிராமணர்கள்) அங்கு பூஜாரிகளாக பொறுப்பேற்றனர். (கேரள வரலாறு: ஏ.ஸ்ரீதரமேனோன் பக்கம் 87)

வயநாடு காட்டிற்குள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிங்ஙேரத் தேவரையும் செல்வரத் தேவியையும் பிரதிஷ்டை செய்துள்ள கோயில், இந்துக் கோயில் மாற்றம் செய்த சமணக் கோயிலாக என்று தெரிய வந்துள்ளது (மாத்ருபூமி வார இதழ். டாக்டர் நெடுவட்டம் கோபால கிருஷ்ணன் 1989).

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகளும் சமணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்த மதம், சங்க காலத்தில் அதன் முழு வளர்ச்சியை அடைந்திருந்தது. ‘மணிமேகலை’ புத்த மத நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாகோதை என்றும் மகோரயபுரம் என்று அறியப்படும் கொடுங்கல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சேர நாட்டு அரசரான பள்ளிபாணப் பெருமாளும் புத்த மதத்தை சார்ந்தவரேயாகும் (இவர் பிறகு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்).

சபரி மலை ஐய்யப்பனும் புத்த மதத்தைச் சார்ந்த ஒரு அரசர் என்று தெரிய வருகிறது. பிற்காலத்தில் இவர் இந்து தேவனாக்கப்பட்டார்.

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

அதற்கு அடுத்தபடியாக, வணிகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அணுகி ‘அரசரின்’ அடுத்தபடியான ‘வணிகர்’ பதவியை வழங்கினர். அப்படி முதல் படியாக ஆட்சியாளர்களையும், வணிகர்களையும் இருகூறுகளாகப் பிரித்தனர். அரசர் என்றும், வணிகர் என்றும், பிறகு இவ்விரு தரப்பினரையும் கொண்டு தங்கள்(ஆரியர்கள்) இவ்விருவரையும் விட உயர்வானவர்கள் என்று சம்மதிக்க செய்தனர். இவ்வாறு, முதல் தரமாக ‘பிராமணர்’, பிராமணருக்குப் பின் ‘அரசர்’, அரசருக்குப்பின் ‘வணிகர்’ – இப்படி ஜாதி முறை அற்ற சமுதாயத்தை முக்கூறு போட்டபின் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களையும் வணிகத்தில் ஈடுபடாதவர்களையும் தாழ்ந்த வகுப்பினராக கருதத் தூண்டினர்....

suvanappiriyan said...

.....ஜாதி முறையற்ற பண்டைய தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை செய்வதில் முதல் முறையாக வெற்றி கண்டனர். இது ஆதி சங்கராச்சாரியாருக்கு முன் நடந்த முதல் ஜாதி பிரிவினையாகும். சங்க கால சமுதாயத்தில் மேல் பதவியை அடைந்திருந்த பாணர், வேடர், குறவர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினர் அடிமட்ட மக்களாக கருதப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர். இந்த திருப்பு முனையில் இருந்துதான் இந்து மதம் இங்கு போதிக்கப்பட்டதும் வளர்க்கப்பட்டதும்.

நாட்டின் ஆட்சித் தலைவர்களையும், வணிகர்களையும் தம் வசப்படுத்திய பின் ஆரியர்களின் அடுத்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளி வைத்திருந்த மக்கள் நம்பிவந்த சமண – புத்த மதங்களை எதிர்த்து வேருடன் பிடுங்கி எறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

“ஆரிய மத பிரச்சாரகர்கள் (மிஷினரி) புத்த சிலைகளையும், புத்த கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்கும் கொள்கையை கடைப்பிடித்தனர்.” (கேரள வரலாறு: ஏ. ஸ்ரிதரமேனோன் பக்கம் 94)

“ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் கேரளத்தைப் பார்க்க வந்திருந்த பொழுது பவுத்தம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பவுத்தப் பள்ளிகள் அழிந்து கிடந்தன. அவற்றில் இந்துக் கோயில்கள் இடம் பெற்றன.” (தென்னிந்திய வரலாறு: டாக்டர் கே.கே.பிள்ளை, பக்கம் 107-108)

சமண புத்த மதங்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றை நம்பி வந்த மக்களை கொலை செய்து குவித்தனர். நாடெங்கும் ரண ஆறு பெருக்கெடுத்தது. சமண பஸ்தி (கோயில்)களையும் புத்த மடாலயங்(கோயில்)களையும் அங்குள்ள புத்தர் சிலைகளையும் உடைத்து அங்கஹீனப்படுத்தி தெருக்களில் வீசினர்.

கேரளாவில் உள்ள கருமாடி, பள்ளிக்கல் முதலிய இடங்களிலும் (நம் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலிருந்தும் இவ்வாறு) நாசம் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். (இப்படி தோண்டி எடுக்கப்பட்ட சிலைகளை பிற்கால வரலாற்றாசிரியர்கள் திப்புசுல்தான் சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.)

முசிறி என்றும், மாகோதை என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொடுங்கல்லூரில் தான் நீசத்தனமான கொலைகள் பெருமளவில் நடந்தன. வரலாற்றில் திடுக்கிடச் செய்யும் இப்படுகொலை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அந்த இடம் ‘கொடும் கொலையூர்’ என்ற பெயரில் புகழ்பெற்றது நாளடைவில் அது கொடுங்கல்லூர் என்று மருவியது. (சேரமான் பெருமாள்: கே.கே. அப்துல் கரீம்.) இவ்வூருக்கு ‘அல்லூர்’ என்ற பெயருமுண்டு. இப்படுகொலைக்குப் பிறகு ‘கொடும் கொலை அல்லூர்’ என்றது கொடுங்கல்லூர் என்றும் மருவியிருக்கலாம்.

இப்பொழுது கொடுங்கல்லூரில் உள்ள பகவதி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ‘பரணி பாட்டு’ (மிகவும் கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட கவிதை பாடுதல்) என்ற புகழ்பெற்ற கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு புனையப்பட்ட பாட்டு பாடுவதும், கோழிகளை பலியிட்டு இரத்தம் ஊற்றுவதும் இப்படுகொலைகளை நினைவுபடுத்தும் சடங்காகும்.

“அவர்கள் (சங்கராச்சாரியாரும் தோழர்களும்) சதுற்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமண மதத்தை தத்துவ ரீதியாக சேர நாட்டில் பரப்பினர். சமண மதத்தின் வேரை முதலில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு அவர்கள் கைக்கொண்ட வழி பாராட்டுக்குரியதாக இல்லை. அவ்வழிகளை பிரதிபலிப்பது கேரளத்தில் சில கோவில்களில் (கொடுங்கல்லூர் முதலிய) உற்சவத்தை ஒட்டி நடத்திவரும் சடங்குகளில் காணப்படுவது” (டி.எச்.பி. செந்தாரச்சேரி: ‘கேரள சரித்திர தார’ பக்கம் 136

suvanappiriyan said...

திரு வெங்கட் சாமிநாதன்!

//நீங்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். இருந்து அமைதி மார்க்கத்தில் சென்றால், ஜன்னத்தில் உங்களுக்கு 72 இளம் கன்னியர்கள் மதுக்குடமும் மஸ்லின் உடையுமாக உங்கள் வரவை புன்னகையோடு எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்கள்.//

நான் வட்டி வாங்குவதில்லை. விபசாரம் செய்வதில்லை. திருடுவதில்லை. முடிந்த வரை பொய் பேசுவதில்லை. வகை வகையான உணவுகள் கண்ணெதிரே இருக்க ஒரு மாதம் முழுவதும் நோன்பிருக்கிறேன். தாய் தந்தையரை கண்ணியமாக நடத்துகிறேன். மனைவி குழந்தைகளோடு பாசத்தோடு நடக்கிறேன். மதுவை தொடுவது கூட இல்லை. இன்னும் ஒரு தனி மனித நல்லொழுக்கத்தின்படி கூடியவரை வாழ முயற்ச்சிக்கிறேன். இவை எல்லாம் எதற்காக? என்னை படைத்த இறைவன் இவ்வாறு என்னை இந்த பூமியில் வாழ சொல்லியிருப்பதால் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

இவ்வளவு தியாகம் செய்து நான் வாழ்வதால் இதற்கு பகரமாக இறைவன் எனக்கு மறுமையில் சில சந்தோஷங்களை தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு?

.RAHMANFAYED said...

அரிய மதம் தமிழகத்தில் தோன்றிய விதம் பற்றி உங்கள் கருந்துக்கள் முலம் அறிந்து கொண்டன் ஜஷக்கல்லாஹர்

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு ... !!!

இந்தியாவில் கள்ள பாஸ்பேர்ட் எளிதாக எடுக்க முடியும் ...

நேபாளம், வங்காளம், பாகிஸ்தான் மூலமாக தரை மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைய முடியும் ...

அடுத்து சில மதரசாக்களில் கற்பிக்கப்படும் தவறான கற்பிதங்கள் தீவிரவாதத்தினை வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றது ( கனடாவிலும் இது நடக்கவே செய்கின்றது ) ....

அடுத்து தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் கடுமையான தண்டனை மிகவும் குறைவே ( தூக்கிலிடுவதில் எனக்கு உடன்பாடில்லை ) ....

அபு ஜிந்தாலை சௌதி இந்தியாவிடம் ஒப்படைத்தது பாரட்டத்தக்கதே ...

பி.ஜெ, ஜாகிர்நாயக் போன்றோர் இஸ்லாமிய அறிவு ஜீவிகளாக தாங்கள் கூறுவது நகைப்பைத் தருகின்றது.. அவர்கள் இருவரும் இஸ்லாமிய அறிவு ஜீவிகளைப் போன்று விளம்பரம் செய்துக் கொள்பவர்கள் என்பது எனதுக் கருத்து.. ஜாகிர் நாயக் ஒரு heretic என்பதும் எனதுக் கருத்து ....

மதரசாக்களுக்கு ஒருங்கிணைந்த பாடத்திட்டமும், கண்காணிப்பும் ஏற்படுத்துவ அவசியமே ( பிற மதங்களுக்கும் இது பொருந்தும் )

இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பதும் எனதுக் கணிப்பு ..

ஆனால் தீவிரவாதிகளில் பெரும்பங்கானோர் இஸ்லாத்தில் உள்ளனர், அவர்கள் இஸ்லாத்தை காரணம் காட்டுகின்றனர், அதற்கு இஸ்லாத்தில் பல கற்பிதங்கள் உடன்பட்டு போகின்றன ... இவற்றை மாற்றுவதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் முனையவேண்டும் .... !!!

suvanappiriyan said...

தங்கமணி!

//தாலிபான் பாமியான் சிலை உடைப்புக்கு என்ன சொன்னீர்கள் என்று பார்த்துவிட்டு லிஸ்டு போட்டிருக்கலாம்.//

தாலிபான்களின் சிலை உடைப்பும் பவுத்தர்கள், சமணர்கள் ஆரியர்களால் துடைக்கப்பட்டதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தாலிபான்கள் சிலைகளை உடைக்கும் போது அங்கு வழிபட ஒரு பவுத்தரும் இல்லை. நான் தாலிபான்களின் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்தவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

ஆனால் தமிழகத்தில் சமணர்களும் பவுத்தர்களும் தங்களின் வழிபாடுகளை சிறந்த முறையில் நடத்தி வரும் போதே ஆரியர்களால் வதை செய்யப் பட்டனர். இதற்கான ஆதாரங்களை விக்கி பீடியாவிலிருந்து கொடுக்கவில்லை. நம் முன்னோர்கள் எழுதிய வரலாற்று ஆதாரங்களையே சமர்ப்பித்துள்ளேன்.

//Apologists explain Khalji sacked the University, torched its famous library, and slaughtered its monks in a case of mistaken identity. They allegedly mistook Nalanda University for a fort, and its monks for soldiers[3][4]. It does seem unlikely that a university full of ordained monks, and books could be mistaken for a military fort however. Indeed the alleged sacking of a Buddhist institution such as Nalanda would be characteristic of the regime's reported iconoclasm[5].//

படை எடுத்து வந்த மன்னன் நாலாந்தா பல்கலைக் கழகத்தை கோட்டை என்றும் மற்றும் அங்குள்ள துறவிகளை படை வீரர்கள் என்றும் தன்னுடைய படை வீரர்களால் தவறாக விளங்கி தவறு நடந்தை உணர்ந்த அரசன் பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதையும் அஙகு குறிப்பாக வைக்கப்படுவதை நீங்கள் பார்க்கவில்லையா? ஏனெனில் போர்க்களங்களில் கூட மதகுருமார்கள், பெண்கள், குழந்தைகளை கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

http://en.wikipedia.org/wiki/Bakhtiyar_Khilji

//Buddhism was in decline all over India during this time due to various reasons. The continuous rise of the Brahmins’ power and caste system in everyday life was a direct threat to Buddhist philosophy, which displaced its political and social base.[16] The Bhakti movement resulted construction of many Hindu temples which undermined Buddhist philosophy.[//

http://en.wikipedia.org/wiki/Nalanda

புத்த மதத்தின் அழிவு பிராமணர்களின் வரவு அதிகரித்ததாலும் சாதி முறை அதி வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டதாலும் என்ற குறிப்பும் நீங்கள் கொடுத்த சுட்டியிலேயே உள்ளதை வசதியாக மறந்து விட்டீர்களே தங்கமணி! ஒரு முஸ்லிம் அரசன் பல்கலைக் கழகத்தை அரச கோட்டை என்று தவறாக படை வீரர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அழிக்கப்பட்டதற்காக பிறகு மன்னிப்பும் கேட்கிறான். அதே சமயம் புத்தமதம் அழிந்ததற்கான காரணமாக பிராமணர்களின் வரவும் சாதி வித்தியாசம் புகுத்தப்பட்டதும் முக்கிய காரணமாக விவரிக்கப்படுவது நான் கொடுத்த ஆதாரங்களை மேலும் வலுவாக்குகிறது.

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

அருமையான, நேர்மையான அலசல் பதிவு... வாழ்த்துக்கள்..

பாகிஸ்தான் தீவிரவாதத்தை பேசும் யாரும்...காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவதில்லை.... காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து அபகரித்துக்கொண்டது என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் தீவிரவாதம் பற்றி பேசுவது கேலிக்கூத்து தான்....

தீவிரவாதம் ஒரு போதும் ஓயாது..

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//பி.ஜெ, ஜாகிர்நாயக் போன்றோர் இஸ்லாமிய அறிவு ஜீவிகளாக தாங்கள் கூறுவது நகைப்பைத் தருகின்றது.. அவர்கள் இருவரும் இஸ்லாமிய அறிவு ஜீவிகளைப் போன்று விளம்பரம் செய்துக் கொள்பவர்கள் என்பது எனதுக் கருத்து.. ஜாகிர் நாயக் ஒரு heretic என்பதும் எனதுக் கருத்து ....//

தமிழகத்தில் மூடப்பழக்கத்தில் மூழ்கியிருந்த இஸ்லாமியர்களை குர்ஆனின் படி வாழ்வை அமைத்துக் கொள்ள பாடுபட்டதில் பிஜெயின் பங்களிப்பை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. மனிதர் என்ற முறையில் அவரிடமும் ஒரு சில குறைகள் உள்ளதை மறுப்பதற்க்கில்லை. அதேபோல் உலக அளவில் கிறித்தவ மிஷினரிகளின் அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டதில் ஜாகிர் நாயக்கின் பங்களிப்பையும் மறுக்க முடியாது. இவர்கள் இருவரிடம் சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் உள்ளது. மேலும் உதாரணத்திற்காகத்தான் என் ஞாபகத்தில் இருந்த இவர்கள இருவரையும் கொடுத்தேன்.

//இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பதும் எனதுக் கணிப்பு ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஃபைஜ் ரஹ்மான்!

//அரிய மதம் தமிழகத்தில் தோன்றிய விதம் பற்றி உங்கள் கருந்துக்கள் முலம் அறிந்து கொண்டன் ஜஷக்கல்லாஹர்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//பாகிஸ்தான் தீவிரவாதத்தை பேசும் யாரும்...காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவதில்லை.... காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து அபகரித்துக்கொண்டது என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல், ஏற்றுக்கொள்ளாமல் தீவிரவாதம் பற்றி பேசுவது கேலிக்கூத்து தான்....

தீவிரவாதம் ஒரு போதும் ஓயாது..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

. //காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து அபகரித்துக்கொண்டது என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல்,//
அப்படியா! அபகரிப்பதற்கு முன்னால் காஷ்மீர் எந்த நாட்டுக்கு சொந்தமாக இருந்தது?