Followers

Tuesday, October 09, 2012

கைதுக்கு பிறகு கர்நாடக முஸ்லிம் இளைஞர்களின் நிலை!


"This is the progress we have made in investigating the role of Muslims in terrorism"

'முஸ்லிம்களின் தீவிரவாதத்தைக் கண்டு பிடிப்பதில் எங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த வரைபடம் நன்றாக விளக்குகிறது அல்லவா?'

--------------------------------------------------------------

கர்நாடக முஸ்லிம்கள் கைதுக்கு பிறகு என்ன நிலை



ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்னைகளை திசை திருப்ப நமது அரசியல்வாதிகள் முஸ்லிம்களை பகடை காய்களாக பயன்படுத்துவது அன்று தொட்டு நடந்து வருகிறது. பிஜேபி அமைச்சர் முஸ்லிம்களை கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றது முதல் பக்க செய்தியாக வந்த போது அதை மறைக்க அதே பிஜேபி ஆளும் கர்நாடகாவில் 11 முஸ்லிம்களை தலைவர்களை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்கள் என்ற பொய்யான செய்தியின் பேரில் ஊகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது பிஜேபி அரசு. இணையத்தில் பல ஆட்சேபகரமான செய்திகளை பார்த்தார்கள். அவர்களது லேப்டாப்புகளில் பல ஆட்சேபகரமான படங்கள் சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் விசரிக்கிறோம் என்ற தகவல்தான் காவல்துறையாலும் ஆட்சியாளர்களாலும் சொல்லப்பட்டது. ஊடகத் துறையில் உள்ள இந்துத்வாவினர் முஸ்லிம்களைப் பற்றிய அவதூறு செய்திகளை முதல் செய்தியாக கொடுத்து பரபரப்பை உண்டு பண்ணி மற்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள். இவை எல்லாம் முன்பே நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தில் கண்ணியமாக உள்ள படித்த முஸ்லிம்களுக்கே இந்த நிலை என்றால் பாதைகளில் தங்களின் வாழ்வை ஓட்டும் ஏழை முஸ்லிமகளின் நிலையை சொல்லவே வேண்டாம். கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் உறவினர்கள் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை பார்ப்போம்.

சந்தேகத்தின் பேரில் கைதான பத்திரிக்கையாளர் முஜிபுர் ரஹ்மானின் சகோதரர் அதாவுர் ரஹ்மான் சொலலும் போது 'என்னுடைய சகோதரனின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம். தான் பிறந்த இந்திய மணணை அளவுக்கதிகமாக நேசிப்பவன். தனது குடும்பத்தையும் அதிகமாக நேசித்தான். சிறந்த பத்திரிக்கையாளனாக ஆசைப்பட்டான். எனது சகோதரனின் கைது தவறாக நடந்திருக்கும் பட்சத்தில் காவல் துறை உடன் அவனை விடுதலை செய்ய வேண்டும்.'

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் இக்பாலின் தந்தை ஷேக் ரஃபீக் அஹமது சொல்லும் போது 'நாங்கள் மிகவும் கண்ணியமான பின்னணியை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீட்டிலிருந்து சில அடி தூரங்களிலேயே எங்கள் வீடும் அமைந்துள்ளது. எனது பிள்ளைகளில் இருவர் மருத்துவர். ஒரு பையன் பொறியாளர். மிகவும் சிரமப்பட்டு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளேன்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு முஸ்லிம் முஹம்மது யூசுஃப். கணவனை இழந்த சகீனாவுக்கு மகன் யூசுஃப் மாதம் 5000 தொடர்ந்து அனுப்புவதில் தவறியதில்லை. 'எனது மகன் கைது செய்யப்பட்ட நாளாக நான் சரியாக சாப்பிடக் கூட இல்லை. படிக்கும் காலங்களில் ஓட்டப்பந்தயங்களில் மிக ஆர்வமாக கலந்து கொள்வான். என்சிசியிலும் பயிற்சி எடுத்துள்ளான். அவனது தந்தை இறப்புக்குப் பிறகு குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. எந்த தவறும் செய்யாத என் மகனை விடுவிக்கா விட்டால் என்னையும் கைது செய்து சிறையில் அடையுங்கள். சிறையில் கிடைக்கும் உணவையாவது நான் சாப்பிட முடியும் அல்லவா?'

இப்படியாக பல சோகங்களை இந்த குடும்பங்கள் சுமந்திருக்கின்றன. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அல்லது ஒரு வருடம் கழித்து 'குற்றம் நிரூபணம் ஆகவில்லை' என்று இவர்களை விடுவிப்பார்கள். அந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் வராமல் நமது காவல் துறையின் கருப்பு ஆடுகள் கவனமாக பார்த்துக் கொள்ளும். இதுதான் சுதந்திரம் அடைந்த நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்காது. இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து பொறுக்காத பல பெரும்பான்மை இந்து மக்களே இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் நாள் வரும். உண்மை என்றுமே உறங்கியதில்லை. ஹேமந்த் கர்கரே போன்ற காவல்துறையில் நியாயவான்களும், மார்க்ஸ் போன்ற பத்திரிக்கைத் துறை யின் நியாயவான்களும் அதிகமதிகம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது வரை இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல ஊடகத் துறையிலே நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும். சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு தினப்பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும். கட்சி சார்பு, இயக்கம் சார்பு இல்லாததாகவும் அது இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ள செல்வந்தர்கள் இதற்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி முன் முயற்சி எடுத்தால் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்..

The relatives of three of the 11 persons arrested on terror charges on Wednesday have said that they now have their hopes pinned on the judiciary. They came together to address a press conference here on Friday.

Journalist Muthi-ur-Rahman Siddiqui’s brother Ata-ur-Rahman said: “My brother’s life is an open book. He loved his country. He loved his family and was committed to becoming a good journalist.” Calling for harsh punishment if he is found guilty, Ata-ur-Rahman said, “But if the police find that they have caught the wrong person, they should release him immediately and not wait for the court to acquit him.”
Father of Jaffar Iqbal, Sheikh Rafiq Ahmed, who is an Assistant Conservator of Forests, said, “We come from a very respectable family. Chief Minister Jagadish Shettar’s house [in Hubli] is a few metres from ours… we are neighbours.”

http://www.thehindu.com/news/states/karnataka/article3847184.ece

Press Release) Condemn the arrest of Muslim youths from different parts of India - Arrest of Muslim youths is a greater conspiracy against Muslim community of India – Muslim Youths are victims of Police terror -Demand to Indian Prime Minister’s intervention to stop targeting innocent Muslims

Civil Liberties Monitoring Committee strongly condemns the arrest of Muslim youths from different parts of India and expressed that the police action is based upon malicious intention and dishonesty. These arrests are the result of nexus between anti Muslim police groups of Hyderabad and Bangalore working with the support of Hindutva outfits. This committee believes that the main intention of these arrests is to divert the attention of people from the court verdict against the criminals of Gujarat genocide and ongoing genocide of Muslim in Assam. As per the reliable sources of civil liberties, police arrested these youths in illegal manner, detained and tortured them and then as per the practice after completing these formalities declared them arrested. This joint operation of police action started simultaneously from Bangalore, Hyderabad, Nanded and other parts of south India.

http://nvonews.com/2012/09/01/civil-liberties-group-condemn-the-arrest-of-muslim-youth-in-karnataka-maharashtra/

---------------------------------------------

பதினான்கு வயதே நிரம்பிய இளம் வலைப்பதிவரும், சமூகப் போராளியுமான மலலா யூசப்சாய் அவர்கள் செவ்வாய் கிழமை சுடப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை செய்தகாட்டுமிராண்டிகளை கடுமையாக கண்டிக்கிறேன். இதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றதாக சில செய்திகள் சொல்கிறது. இதை அவர்கள் செய்திருந்தால் அந்த காட்டுமிராண்டிகளையும் கண்டிக்கிறேன்.

ஆனால் முல்லா உமர் விடுதத பெருநாள் செய்தியில் தாலிபான்கள் பெயரை பயன்படுத்தி பல அட்டூழியங்களை நேட்டோ படைகள் செய்து வருவதாகவும், நேட்டோ படைகள் சொல்பவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறுகிறார். தாலிபான்களின் பெயரை களங்கப்படுத்த அமெரிக்கா செய்த முயற்சியா என்றும் தெரியவில்லை. யார் செய்திருந்தாலும் இவர்கள் மனித குல விரோதிகளே!

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_23.html

http://www.uruknet.de/?p=m90397&hd=&size=1&l=e

கல்வியில் எங்களின் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பெரும் பொருளாதாரம் ஒதுக்கப்படும். அதேபோல் எங்களின் பெண்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும். அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவை அனைத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமையப் பெறும்.

We are committed to give all legitimate rights to women in the light of the Islamic principles, national interests and our noble culture. It is a matter of sorrow to say that the common people, particularly women, are grappling with various hardships following the invasion of the invaders. Even many women have immolated themselves or have been martyred miserably or their honor has been violated. Still this brutal trend continues. It is in a time that women were completely secure from such sufferings during the past reign of the Islamic Emirate.

We urge all universal organizations working for the protection of human rights not to rely only on reports of the foreign forces and western media outlets; Carry out your own impartial and on site investigation about the ground realities in the area, by fulfilling your responsibility in this regard. The civilian casualties that occur as a result of the American blind bombardment, unsanctioned raids on (residential) houses , letting loose dogs on children and women to bite them; urination on dead bodies, torture of prisoners in prisons, rape of women at the hands of soldiers, police and Arbakis; violation against the honor and property of people are no more something hidden from the eyes of people.


15 comments:

suvanappiriyan said...

Oct 10: பீகார் மாநிலம், கயாவில், தலித் பெண் புதுக்வா தேவி 35, இவர் உயர் ஜாதியை சேர்ந்த சிலரால், உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

இவரது கணவர் பர்ஹன் மன்ஜி, சிம்லாவில் கூலி வேலை செய்கிறார். புதுக்வா தேவி, தன் நான்கு குழந்தைகளுடன் கயாவில் வசித்து வந்தார். இவருக்கு மத்திய அரசின், "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், வீடு பெற்றுத் தருவதாகக் கூறி லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் வாக்குறுதி அளித்தனர்.

இந்தக் காரணத்தைக் கூறி, அடிக்கடி அவரிடமிருந்து பணம் பெற்றனர். சமீபத்தில், பணம் கேட்ட போது அவர் தர மறுத்தார். அதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அவரை தாக்கி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துவிட்டார்.

சிந்திக்கவும்: ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் ஜாதியின் அடிப்படையில் வேறுபாடு இல்லலை. ஆனால் மனிதர்களிடம் மட்டும் குறிப்பாக இந்தியாவில் பிறப்பால் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற வேறுபாடு நிலவுகிறது. கற்கால சிந்தனை படைத்த இந்த கொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஜாதி வேறுபாடுகள் அனைத்தும் ஹிந்துத்துவா வர்ணாசிரமத்தின் கீழே வருகின்றது. இதனால்தான் பெரியாரும், அம்பேத்காரும் இதை வன்மையாக எதிர்த்தார்கள்.

இந்த வர்ணாசிரம கொள்கையைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களும் அதன் கேடர்கலான அத்வானியும், ராமகோபாலனும், சோவும், சுப்பிரமணிய சுவாமியும், மற்றும் தினமலர் வகைராக்களும் ஆதரிக்கின்றன. இந்தியாவில் வாழும் ஹிந்துக்களில் பெரும்பான்மையினரை தாழ்த்தப்பட்ட ஜாதி என்று அறிவித்து விட்டு ஒரு சிறிய கூட்டம் அவர்களை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஆளுகிறது. இந்த நிலை மாறவேண்டும். இது போன்ற கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

http://www.sinthikkavum.net/2012/10/blog-post_9.html

suvanappiriyan said...

சுந்தரி!

// மதகுரு சுவனப்பிரியன் ஐயாவே.

அப்புறம் கடந்த ஒரு 2 வருஷத்துல நடந்த விவாகரத்து கொலைகளை இங்கே பட்டியலிடவும். கட்டுரையின் முக்கியமான சாராம்சத்தை விட்டுட்டு கண்டபடி சப்பைக் கட்டு கட்டிட்டு ஓடிவர்ரீங்க.//

MUMBAI: Over the last five years, Mumbai police have registered at least one dowry-related case every day that led to nearly 146 deaths, classified under murder, suicide and other homicide like wife-burning. From 2008 to 2012 (till September 30), 243 cases of abetment to suicide and 1,544 mental or physical harassment cases were also recorded.
Shockingly, the violence in dowry cases is rising in the city, with the number of murders in such cases touching 10 with three months still to go in the year. In 2011, records showed nine murders. Besides suicide and murder, other dowry-related deaths have reached a count of six already this year. Last year, it was 10.

Greed seems to be at the root of many cases because as many as 338 cases of misappropriation of streedhan have been filed from 2008 till September 2012. These cases too seem set for a jump with 60 already filed this year, compared to 68 in 2011.

The hand maiden of dowry-related cases is domestic violence. An act of cruelty against a woman by her husband or in-laws is recorded every nine minutes in India, says the National Crime Records Bureau. The volume of dowry cases in Mumbai shows even educated, independent women living in a city may not be shielded from domestic abuse.

High court advocate Rajendra Bade, 33, arrested for abetting his wife's suicide, has been remanded in police custody till Wednesday. His father, a retired civic official, was also remanded. Bade's wife, Rupali, 22, committed suicide last week allegedly after being abused for giving birth to a girl and unable to pay dowry.
Some disagree. "Misuse of the dowry and cruelty law is becoming common as women often see this as an option to speed up the lengthy divorce process. The police machinery is used to recover the property left behind while leaving the house," said a senior officer attached with an eastern suburb police station.

//lengthy divorce process//

விவாகரத்து செய்வதை சிரமமாக்கி பல வருடங்கள் இழுப்பதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு மூல காரணம் என்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது.

http://timesofindia.indiatimes.com/city/mumbai/Dowry-related-violence-on-rise/articleshow/16745824.cms

http://suvanappiriyan.blogspot.com/2012/10/10.html

suvanappiriyan said...

மதம் என்று பார்க்கும் போது - உலகின் எல்லா மதங்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்ட முடியும். அதே நேரத்தில் மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு மதம் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு.

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல.

http://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html

ராவணன் said...

அண்ணாச்சி...முனியாண்டிக்கு பொங்கல் வைக்கப் போகலாமா?

கோவி.கண்ணன் said...

//தாலிபான்களின் பெயரை களங்கப்படுத்த அமெரிக்கா செய்த முயற்சியா என்றும் தெரியவில்லை.//

:) நல்ல காமடி சார் உங்களோட

அது என்னவோ களங்கமே படாமல் உலக சமாதானத்திற்காக பாடுபடும் இயக்கம் போல பில்டப் கொடுக்கிறிங்களே ஏன் ? நிரந்தர சொர்க்கத்தில் உங்களுக்கு அடுத்த அறையில் நித்திய கன்னிகைகளை அனுபவிக்கும் நபர்கள் என்பதற்காகவா ?

:)

suvanappiriyan said...

//அது என்னவோ களங்கமே படாமல் உலக சமாதானத்திற்காக பாடுபடும் இயக்கம் போல பில்டப் கொடுக்கிறிங்களே ஏன் ? நிரந்தர சொர்க்கத்தில் உங்களுக்கு அடுத்த அறையில் நித்திய கன்னிகைகளை அனுபவிக்கும் நபர்கள் என்பதற்காகவா ?//

தாலிபானுக்கு பில்டப் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. ஏனெனில் தாலிபான்கள் உலக முஸ்லிம்களின் அதாரிட்டியும் அல்ல. அவர்கள் கொலை செய்தது உண்மையானால் அதை வன்மையாக கண்டிப்பதாகவே சொல்லியுள்ளேன்.

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியின் செய்திகளை கசிய விடுவதே அமெரிக்க படைகள்தான். எந்த மாதிரியான செயதிகள் வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் அவர்கள்தான். எந்த வொரு மீடியா சப்போர்டும் இல்லாத தாலிபான்களின் உண்மை நிலவரம் நமக்கு தெரிய வேண்டும் என்றால் அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியான பிறகே சாத்தியப்படும். அதுவரை ஒரு பக்க செய்தி மாத்திரமே நமக்கு கிடைத்து வரும்.

suvanappiriyan said...

//அண்ணாச்சி...முனியாண்டிக்கு பொங்கல் வைக்கப் போகலாமா?//

ஏன்...ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட போக மாட்டீங்களா? ஓ....அங்கெல்லாம் உங்களை உள்ளேயே விடமாட்டாங்கலே....ஐயோ பாவம்....:-)

suvanappiriyan said...


தங்கமணி!

நேபாளம், ஆப்கானிஸ்தான், வளைகுடா இங்கெல்லாம் உள்ள பெண்களுக்காக நீங்கள் ரொம்பவும் கவலைப்படுவது போல் தெரிகிறது. நல்ல விஷயம்தான் அந்த பெண்களின் வாழ்வு சிறக்க ஏதாவது செய்தாக வேண்டும்.

இதை விட முக்கியமாக நமது நாட்டு நிலையை நீங்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது. நமது ஹரியானாவில் ஒரு மாதத்தில் மட்டும் 13 தலித் இள வயது பெண்கள் வன் புணர்வு செய்யப்பட்டு அதை மொபைலில் படமாக்கி உலகம் முழுவதும் சுற்றுக்கும் விட்டுள்ளார்கள் மேல் சாதி அரக்கர்கள். இதில் நேற்று ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உங்களின் மேலான கருணை பார்வையை நமது நாட்டு பாவப்பட்ட மக்களின் பக்கமும் கொஞ்சம் திருப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவீர்களா? இந்துத்வா சகோதரர்களுக்கு கொஞ்சம் பாடம் எடுத்து இது போன்ற வன்புணர்வுகளை தடுத்து நிறுத்துவீர்களா? நமது நாட்டு மானம் கப்பலேறுவதை தடுக்க மாட்டீர்களா?

பதிலை எதிர் பார்த்து ஆவலுடன்.....

உதயம் said...

உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிடும் கோவி.கண்ணன் என்பவர், பதிவின் மையக்கருத்தை குறித்து எதுவுமே குறிப்பிடாமல், வேறு ஏதாவது வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். இது பதிவின் வீரியத்தை குறைக்கும் திட்டமிட்ட செயலாகும். முஸ்லிம்களின் பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி. உங்களுடைய பல பதிவுகளில் இப்படி திசை திருப்பல்களும், வேறு விவாதத்திற்கு இட்டு செல்லும் முறையை அவர் கையாள்வதை நீங்கள் காணலாம். இதே செயலை வேறொரு நபரும் செய்து வருகிறார்.

suvanappiriyan said...

சகோ உதயம்!

//உங்கள் பதிவுகளில் பின்னூட்டமிடும் கோவி.கண்ணன் என்பவர், பதிவின் மையக்கருத்தை குறித்து எதுவுமே குறிப்பிடாமல், வேறு ஏதாவது வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். இது பதிவின் வீரியத்தை குறைக்கும் திட்டமிட்ட செயலாகும//

என்ன மாதிரியாக அவர்கள் கேள்விகள் கேட்டாலும் அதற்கான அனைத்து பதில்களும் இருப்பதால் ஆபாசமில்லாத அனைத்து பின்னூட்டங்களையும் அனுமதிக்க வேண்டும். மாற்று கருத்துடையவர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்து நமக்கு மேலும் பல புதிய விஷயங்ள் தெரிய வருமல்லவா?

UNMAIKAL said...

பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? :

முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "சங்கேத" வார்த்தை அம்பலம்!


Monday, 08 October 2012 07:11 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 8, குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க,

ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,
என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும்,

நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும்,

போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ். சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற இந்த என்கவுண்டர் வழக்கில்,

தற்போது கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் "போலீஸ் பித்தலாட்டங்கள்" வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சாதிக் ஜமாலை சுட்டுக்கொன்ற குஜராத் போலீஸ்,

அது குறித்த "எப்.ஐ.ஆரில்" சாதிக் ஜமாலை தாங்கள் "மட்பேட்" என்ற இடத்தில் வைத்து கைது செய்ததாகவும்,

அப்போது அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாதகவும் (அதுவும் குஜராத் கலவரம் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்று) பதிவு செய்துள்ளனர்.

பின்னர், தப்ப முயன்றபோது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான குழு, சுட்டுக்கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான இதே குழு தான்,

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட பலரையும் என்கவுண்டர் முறையில் கொன்றது,தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல், எல்லா என்கவுண்டர்களிலும் ஒரே துப்பாக்கி (.38 mm ரக துப்பாக்கி) பயன்படுத்தி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதும் "பாரன்சிக் ரிப்போர்ட்" மூலம் சி.பி.ஐ. கண்டு பிடித்துள்ளது.

எனவே, இது எதேச்சையாக நடத்தப்பட்ட என்கவுண்டராக இல்லாமல் திட்டமிட்ட சதி என்பதற்கான மேலும் ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்ட சி.பி.ஐ.க்கு அதிர்ச்சியளிக்கும் "தொலைபேசி உரையாடல்" உள்ளிட்ட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது. சம்பவத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு,

மகாராஷ்டிர போலீசிடம் தொலைபேசியில் பேசிய குஜராத் இன்ஸ்பெக்டர்,

பலி கொடுக்க ஏதாவது "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்கிறார்,

ஆம்.ஒரு சேவல் இருக்கிறது, கொண்டு செல்லுங்கள் என மறுமுனையில் பதில் வருகிறது.

அதை தொடர்ந்து, குஜராத் போலீஸ், ஜீப்பில் மகாராஷ்டிரா வந்தது.

கணக்கில் காட்டப்படாமல் விசாரணைக்கைதியாக தங்கள் வசம் இருந்த சாதிக் ஜமால், குஜராத் போலீசிடம் ஒரு பூங்காவில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார்.

குஜராத் போலீசும் கைது குறித்து பதிவு செய்யாமல்,
பலி கொடுக்க "சேவல்" கிடைத்த சந்தோஷத்தில், சில நாட்கள் சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்திருந்துவிட்டு கச்சிதமாக என்கவுண்டர் செய்திருப்பது,தெரிய வந்துள்ளது. எனவே, குஜராத் இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான 7 பேர் கொண்ட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் குழு,

இவர்களுக்கு உடந்தையாக செயல் பட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த, 2 "டி.எஸ்.பி.ரேன்க்" போலீஸ் அதிகாரிகள்,

மற்றும் சாதிக் ஜமால் ஒரு பயங்கரவாதி என சித்தரித்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 12 நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,என தெரிகிறது. சி.பி.ஐ., விசாரணையை முழுமையாக நடத்திவிட்டதாகவும்,

இன்னும் மகாராஷ்டிர போலீசில் ஓரிருவரிடம் விசாரணையை முடித்த பிறகு,

மேற்கண்ட 12 "காவல்துறை கறுப்பாடுகள்" மீதும்,

அடுத்த மாத ஆரம்பத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும்,என சிபிஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/553--qq-qq-

UNMAIKAL said...

முஸ்லிம்கள் அப்பாவிகள் :

"நிமேஷ் கமிஷன்" அறிக்கை!;

போலீசை காப்பாற்றும் முயற்சியில் சமாஜ்வாடி அரசு!!


Tuesday, 09 October 2012 09:24 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 9, உத்தர பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சமாஜ்வாடி அரசு,

முஸ்லிம் "சிறைவாசிகள்" குறித்த "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை அமல் படுத்துவதில் "அலட்சியம்" காட்டி வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு, உ.பி.யின் லக்னவ், பைசாபாத் மற்றும் வாரணாசி பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன.

அப்போது, "மீடியாக்கள்" முஸ்லிம்களை குற்றப்பரம்பரையினராக சித்தரித்து "மணிக்கொரு முறை" கற்பனையான அவதூறு பிரச்சாரங்களை செய்து வந்தது.

அதையடுத்து, அன்றைய மாயாவதி அரசு மேற்படி வழக்குகளில்,

முஹம்மத் தாரிக் காசிமி, காலித் முஜாஹித், சஜ்ஜாதூர்ரஹ்மான் மற்றும் அக்தர் வாணி ஆகியோர் மீது முறையே,

பாராபங்கி காவல் நிலையத்தில் FIR No.1891/2007,

லக்னவ் வசீர்கஞ் காவல் நிலையத்தில் FIR No.547/2007,

பைசாபாத் காவல் நிலையத்தில் FIR No.398/2007

மற்றும் கோரக்பூர் காவல் நிலையத்தில் FIR No.812/2007

ஆகிய எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டுவெடிப்பின் தன்மையை குறித்து,

அன்றைய உத்தர பிரதேச, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, பிரிஜ்லால் குறிப்பிடும்போது,

இந்த குண்டுவெடிப்புக்கள் ஹைதராத் "மக்கா மஸ்ஜித்" குண்டுவெடிப்பை ஒத்து உள்ளதாக கூறினார்.

அதையடுத்து, உ.பி. "ATS" மற்றும் "STF" படையினரால், முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்கின் உண்மை தன்மைகளை கண்டறிய "நீதிபதி S.D.நிமேஷ்" அவர்களின் தலைமையில் "விசாரணைக் கமிஷன்" அமைத்து "மாயாவதி அரசு"உத்தரவிட்டது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 3 மாதத்துக்குள் "நிமேஷ் கமிஷன்" அறிக்கை உட்பட,

முஸ்லிம்கள் மீதான எல்லா வழக்குகளையும் விசாரிக்க கமிஷன்கள் அமைத்து அப்பாவி முஸ்லிம்கள் விடுதலைக்கு வழிவகுப்போம்,என கூறியது சமாஜ்வாதி கட்சி.

இந்நிலையில், நீதிபதி நிமேஷ் கமிஷன், தனது அறிக்கையை இவ்வாண்டு "ஆகஸ்ட் 30 ந்தேதி" சமர்ப்பித்து விட்டது.

அதில், சிறையில் உள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள் எனவும்,
சட்டத்துக்கு புறம்பான முறையில், முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து அவர்களின் கைது குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது உள்ளிட்ட,

பல குற்றச்சாட்டுக்கள் "ATS" மற்றும் "STF" மீது நிமேஷ் கமிஷன் தெரிவித்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள், முன்பை போலவே இப்போதும் "மீடியாக்களின் துணையை" நாடிய வண்ணம் உள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள போலீஸ் அதிகாரிகள் பலரும் தற்போது "பிரின்ட் மீடியா" மற்றும் "எலெக்ட்ரானிக்" மீடியாக்களின் அலுவலகங்களை அணுகி,

தங்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட முயற்சித்து வருகின்றனர்.

இதற்கு, பா.ஜ.க., முழு அளவில் உதவி வருவதுடன்,

"நிமேஷ் கமிஷன்" அறிக்கையை ஏற்று முஸ்லிம்களை விடுதலை செய்யக்கூடாது, என உரக்க குரல் கொடுத்து வருகிறது.

சமாஜ்வாடி அரசும், போலீசை காப்பாற்றும் முயற்சியில், "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை பகிரங்கமாக வெளியிட மறுத்து வருகிறது.

http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/554--q-q-

UNMAIKAL said...

முஸ்லிம்கள் விடுதலை பெற்று விடக்கூடாது என்று,

நீதிமன்றங்களை முடக்கினால் எப்படி நியாயம் கிடைக்கும்? :

ரன்தேர்சிங் சுமன் உச்ச நீதிமன்றத்திடம் முறையீடு!


Tuesday, 09 October 2012 20:41 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 10, உத்தரபிரதேசத்தில் கடந்த 2007ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில்,

வழக்கு விசாரணையை நடத்தவிடாமல் ஹிந்துத்துவ சக்திகள் "கோர்ட் புறக்கணிப்பில்" ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்றங்களையே முடக்கி விட்டால் எப்படி நீதி கிடைக்கும்?

என கேள்வி எழுப்புகிறார், சமூக ஆர்வலரும் முஸ்லிம்கள் சார்பில் ஆஜராகி வரும் வழக்கரிஞருமான, ரன்தேர் சிங் சுமன்.


கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள்,

அவர்கள் விடுதலை குறித்து, உ.பி.அரசு முடிவெடுத்திருந்த விஷயத்தை "ATS" மற்றும் "STF" படையினர்,

மீடியாக்களுக்கு கசியவிட்டு,

அப்பாவிகளின் விடுதலைக்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளான போலீசுக்கு ஆதரவாக,

ஹிந்துத்துவ சக்திகள் தீவிரமாக களத்தில் இறங்கி,

முஸ்லிம்கள் விடுதலை பெற்று விடக்கூடாது என்று,

நீதித்துறையில் உள்ள ஹிந்துத்துவ வழக்கறிஞர்கள் மூலம், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், 06/10 அன்று "பைசாபாத் நீதிமன்றத்தில்" வழக்கு விசாரணைக்கு வந்தபோதும்,

08/10 அன்று "பாராபங்கி நீதிமன்றத்தில்" விசாரணைக்கு வந்தபோதும் நீதிமன்றத்தை நடத்த விடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்,
ஹிந்துத்துவா மற்றும் போலீஸ் ஆதரவு வழக்கறிஞர்கள்.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால், முஸ்லிம்கள் விடுதலை அடைவதோடு "போலீசின் முகத்திரை கிழிந்துவிடும்" என்ற அச்சத்தில், நீதிமன்றங்களை முடக்கி வருகின்றனர்.

எனவே, உச்சநீதிமன்றம் இதில் தலையிடவேண்டும் எனக்கோரிக்கை விடுத்து "அவசரக்கடிதம்" ஒன்றை, வழக்கறிஞர் சுமன் நேற்று 09/10 அனுப்பி வைத்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளையே தடுத்துவிட்டால், அப்பாவிகளுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

அரசியல் சாசனத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகும்?

என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு "பதிவுத்தபால்" மூலம் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் ,சுமன்.

மேலும், அந்த கடிதத்தின் நகலை அலஹாபாத் ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளதோடு,

ஈ.மெயில்களும் அனுப்பியுள்ளார்,வழக்கறிஞர் சுமன்.

http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/555-2012-10-09-20-41-01

UNMAIKAL said...

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வோடு விளையாடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அன்சாரி வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்! - தமுமுக கோரிக்கை!


Wednesday, 10 October 2012 07:42 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்

OCT 10, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி கேட்டுக்கொண்டார்.

"தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் தமீம் அன்சாரியை க்யூ பிரிவு போலீசார் கைது செய்த விதமும்,

அதன்பின் கைதுக்கு அவர்கள் கற்பித்த காரணங்களும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கின்றன.

அன்சாரியை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக க்யூ பிரிவு போலீசார் செய்த ஜோடனைகளும்,

அவர்களது வாதங்களும் நகைப்பிற்கிடமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது.


அன்சாரியின் கைது சந்தேகத்திற்குரியதாகவும் நேர்மையற்றதாகவும் இருப்பதை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கள ஆய்வின் மூலம் கண்டறிந்தோம்.

பேராசிரியர் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தன்னிச்சையான உள்நோக்கம் கொண்ட கைதுகள் காஷ்மீர், டெல்லி, குஜராத், ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது.

தற்போது தமிழகத்திலும் இந்நிலை தலைகாட்டுவது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும்.

இதுபோன்ற கைதுகள் அப்பாவி இளைஞர்களின் முழு இளமைக்காலத்தையும் அவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றன.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வோடு விளையாடும் இந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.


அன்சாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.''

- இவ்வாறு தமுமுக மூத்த தலைவர் செ. ஹைதர் அலி கூறினார்.


http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/557-2012-10-10-07-42-50

naadoodi said...

//தாலிபானுக்கு பில்டப் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. ஏனெனில் தாலிபான்கள் உலக முஸ்லிம்களின் அதாரிட்டியும் அல்ல. அவர்கள் கொலை செய்தது உண்மையானால் அதை வன்மையாக கண்டிப்பதாகவே சொல்லியுள்ளேன்.// அப்ப ஏங்க மோடி கொல செஞ்சதை நேர்ல பாத்தவரு மாதிரியே கோபப்படுறீங்க.... இதே பாணியில மோடி தவறு செய்திருந்தால் அதை கண்டிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே.....ஓ... ஆப்கானிஸ்தான்ல தாலிபான் செஞ்ச அது அமெரிக்க சதி... ஆனா இந்தியவிலோ பிற நாடுகளிலோ நடந்த அதுவும் அந்த நாட்டில் உள்ள பெரும்பாண்மை மதத்தவரே பொறுப்பேற்க வேண்டும். ஒருவேளை கண்டுபிடித்து சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தந்தாலும், அவர் இஸ்லாமியராக இருந்த அவர் செய்திருந்தால் நான் கண்டிக்கிறேன் என்பதோடு நிறுத்துகிவீங்க... ரைட்டு..