Followers

Wednesday, September 21, 2016

ஜெ அரசு, கருப்புவை நெருங்குவதற்கு அஞ்சுவது ஏன்?

ஜெ அரசு, கருப்புவை நெருங்குவதற்கு அஞ்சுவது ஏன்?
-----------
38 வழக்குப் பதிவுகளும், 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ள ஒரு நபர் எப்படி தேர்தலில் நிற்க முடியும்? என்ற சர்ச்சையோடுதான் பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் 'கருப்பு' வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தும் டெபாசிட் கூட கிடைக்காத கருப்பு எப்போதும் மத்திய அரசுக்கு செல்லப்பிள்ளை.

தமிழ்நாட்டு இந்து பரிவாள அமைப்புகளுக்கு அடியாள் வேலை பார்ப்பதோடு இவர்களின் வாழ்நாள் கடமையாக மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது வீரதீர சாகசம் செய்து காவிப் படை தளபதியாக தமிழ்நாட்டு மக்களுக்கு சனி பகவானாக சுற்றிக் கொண்டிருக்கும் கருப்புக்கு 5 மாதங்களுக்கு முன்பு அதிமுக்கியத்துமான பதவியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

சென்னை துறைமுகத்தில் பங்குத்தாரர்களில் ஒருவராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. சென்னை துறைமுகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. 1 மணி நேரத்திற்கு கோடிக்கணக்கில் குவியும் பணங்களை இந்து பரிவாள அமைப்புகள் வளர்ச்சிகளுக்கும் பா.ஜ.கட்சி நிரந்தர பொருளாதாரத்திற்கும் பொதுப்பணத்தை அபகரிக்கும் பா.ஜ.க அரசு அதற்கு தேர்ந்தெடுத்தது சட்ட விரோத குற்றவாளியை. சாதாரண மனிதன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட வழக்கு இருக்கிறதா? குற்றவாளியா? என்று விசாரிக்கும் அரசு அமைப்பு இப்படி கருப்புக்கு சலுகைகளை வாரி வழங்குவது எதற்காக?

"பத்து பைசா முறுக்கு, மசூதிய அடிச்சு நொறுக்கு" என்ற கோஷங்களோடு மதக் கலவரத்தை தூண்டுபவர்களுக்கு 1 லட்சம் பணம் பட்டுவாடா செய்யும் இந்த கருப்பு...
"ஜெயிலில் ராம்குமார் செத்துப் போனதுக்குக்கூட நான்தான் காரணம் என்றுகூட சொல்வார்கள். அவரை சிறைக்குள் கொல்லக் கூடிய அளவுக்கு நான் பெரிய ஆளா? ஆளுங்கட்சி அமைச்சர்களால்கூட இப்படிச் செய்ய முடியாது" என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

கதர் சட்டையை விட காக்கி டவுசர் சிறைக்குள் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். காக்கி டவுசர் கருப்புக்கும் அந்த மகிமையை வாரி வழங்கி இருக்கிறது. காந்தியையும் இந்த காவிதான் சாகடித்தது. அம்பேத்கரையும் இந்த காவிதான் சாகடித்தது. சுவாதி, ராம்குமாரையும் இதே காவிதான் சாகடித்திருக்கிறது.
இப்பவும் முதலில் சொல்லியதையே சொல்கிறேன். கருப்பு கூலிப்படை சுவாதியோடு ராம்குமாரையும் சேர்த்து படுகொலை செய்துள்ளது. இத்தனை பொறுக்கித்தனங்களை செய்யவும் கூலிப்படைகளுக்கு கூலி கொடுக்கவும்தான் மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் குற்றவாளியை ஊக்குவித்து பொருளாதார உதவியும் செய்கிறது.
ஜெ அரசு, கருப்புவை நெருங்க அஞ்சுவதற்கு காரணமும் இதுதான்!

#தமிழச்சி
22/09/2016

தமிழச்சி மீது கருப்பு போலிசில் புகார்:
https://www.patrikai.com/swathi-murder-case-complaint-face…/

சுவாதி படுகொலையும் ராம்குமார் மரணமும்! -பா.ஜ.க 'கருப்பு' பேட்டி
http://www.vikatan.com/…/68563-bjp-karuppu-muruganantham-sp…

No comments: