Followers

Tuesday, June 20, 2017

வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது?

வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது?

ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுகிறது என்பதை உங்களுக்குக்கெல்லாம் அறிமுக மான பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக் கின்றேன். இது ஒரு எண்டோவ்மென்ட் லெக்சர். அறக்கட்டளை சொற்பொழிவு.

Islam and Indian Culture Towards National integration
என்ற பெயராலே ஒரிசாவிலே கவர்னராக இருந்த மிகப் பெரிய மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டே - அவர் இல்லை இப்பொழுது.

மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டேமிகப் பெரிய வரலாற்று ஆசிரியர் சி.என். பாண்டே அவர்கள். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே பாட்னா பல்கலைக் கழகத்திலே அவர்கள் ஆராய்ச்சி நிகழ்த்தினார்கள்.

நீண்ட காலத்திற்கு முன்னாலே எனக்கு அறிமுகமான ஒருவர். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடைய நூலை எனக்கு அனுப்பினார். அந்த நூலிலே ஒரு ஆழமான செய்தியை சுட்டிக் காட்டியிருக்கின்றார். வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது என்பதை சொல்லி யிருக்கின்றார்கள்.
சமுதாயத்திற்கு பெரிய கேடுஅந்த ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்லி, அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கேடாக ஆகியிருக்கிறது என்பதை மட்டும் உங்களுக்குச் சுட்டிக்காட்டி என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

இஸ்லாமியர்களுடைய வரலாற்றைச் சொல்லும் பொழுது பல இந்திய சரித்திர நிலைகளைச் சொல்லுகின்றார்.

திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சிபேராசிரியர் எம். ஹபீப் சொல்கிறார். திப்பு சுல்தானைப்பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சி செய்தார். ஆய்வுபற்றி சொன்னார்கள் அல்லவா டாக்டர் ராமசாமி அவர்கள். ஆய்வுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

1928 ஆம் ஆண்டு திப்பு சுல்தான்பற்றி ஆராய்ச்சி அலகா பாத்தில் நடத்தினேன். 3000 பார்ப்பனர்களை திப்பு சுல்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்று டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர் சமஸ்கிருத துறைக்குத் தலைவர் - கல்கத்தா பல்கலைக் கழகத்திற்கு. இப்படி நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றார். ஹபீப் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதினார்.

ஆதாரம் இல்லைமைசூர் கெசட்டில் இருக்கிறது என்று அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட் அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் கிடைக்க வில்லை. கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் கிடைக்கவில்லை என்றவுடன் மைசூர் யுனிவர்சிட்டி துணை வேந்தருக்குக் கடிதம் எழுதுகிறார். மைசூர் கெசட்டிற்கு புதிதாக ஒரு ஆசிரியரைப் போட்டு ஸ்ரீகண்டய்யா என்பவர் அதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கின்றார். துணை வேந்தர் அவர்கள் ஸ்ரீ கண்டையா அவர்களுக்கு இந்தக் கடிதத்தையும் பார்வைக்கு அனுப்புகின்றார்.

திப்பு சுல்தானின் தளபதியே ஒரு பார்ப்பனர்பேராசிரியர் ஸ்ரீகண்டையா இந்த மாதிரி ஒரு சம்பவமே கிடையாது என்று அவர் பதில் எழுதியிருக்கின்றார். திப்பு சுல்தானுடைய பிரைம்மினிஸ்டரே ஒரு பார்ப்பனர். அந்த பார்ப்பனருடைய பெயர் பூர்ணய்யா.

திப்புசுல்தானின் படைத் தளபதியும் ஒரு பார்ப்பனர். அவருடைய பெயர் கிருஷ்ணாராவ். 168 கோயில்களுக்கு ஆண்டுதோறும் திப்பு சுல்தான் மானியம் வழங்கியிருக்கின்றார்.

சிருங்கேரி மட ஜகத் குரு சங்கராச்சாரியாருக்கு கடிதங்கள் பல எழுதி இணக்கமாக இருந்திருக்கிறார் என்று இவ்வளவு ஆதாரத்தையும் கொடுத்தார்.

தகவல் வெளியே வந்திருக்காது.........

இந்த ஆதாரத்தை ஒருவர் இவ்வளவு கஷ்டப்பட்டு வழங்கி யிருக்காவிட்டால் இவ்வளவு தகவல்களும் வெளியே வந்திருக்காது. இந்த புத்தகத்தில் இருக்கின்ற தகவலும் இதுவரை சரியாக வெளியே போகவும் இல்லை. எனவே இன்னமும் என்ன சொல்லி கொடுக்கிறார்கள்?
3000 பிராமணர்கள் தற்கொலையா? திப்பு சுல்தான் நெருக்கடி கொடுத்ததினாலே மூவாயிரம் பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றான். இதைப்போய் குஜராத்தில் சொன்னால் என்ன ஆகும்? இதை உத்தரப் பிரதேசத்தில் சொன்னால் என்ன ஆகும்? இந்தப் பாடத்தை ராஜஸ்தானத்திலே படித்தால் என்ன ஆகும்? மத நல்லிணக்கம் இருக்குமா? சமூக ஒற்றுமை இருக்குமா? சமூகத்தில் மனித நேயம் இருக்குமா?

உண்மைகளை எழுதுங்கள்.  விருப்பை உண்டாக்குவதற்குப் பதிலாக மனிதர்களை ஒன்று படுத்துவதற்குப் பதிலாக, மண்ணின் ஒருமைப்பாடு பேசக் கூடியவர்கள், மக்களின் ஒருமைப்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாமா?

எனவே பேராசிரிய பெருமக்களே..... உங்களை நாங்கள் வேண்டுவதெல்லாம் உண்மைகளை அதன் நிர்வாணத் தன்மையிலே நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். தேவையானால், குறைந்த பட்ச ஆடையை மட்டும் போடுங்கள். உண்மைக்கு ஒப்பனை செய்யாதீர்கள். அது வரலாறாக ஆகிவிட முடியாது. உண்மை உண்மையாக இருக்க வேண்டும்.
ஒளிப்படம் ஒளிப்படமாக இருக்கட்டும். ஊடுகதிர் - எக்ஸ்ரே எக்ஸ்ரேவாக இருக்கட்டும். ஒருபோதும் ஓவியமாக மாற்ற வேண்டாம் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.


- சென்னைப் பல்கலைக் கழகத்தில் 14-12-2007 அன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி

7 comments:

Dr.Anburaj said...


திருச் செந்தூா் முருகன் கோவிலை கட்டியவன் மாலிக்காபுா்தான் என்போம் யாா் கேட்க போகின்றாா்கள்.மானமிகு வீரமணி கலைஞா் உண்மை என்பாா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோவிலை கட்டியவா் ஔரங்கசீப் என்போம் யாா் கேட்க போகின்றாா்கள்.மானமிகு வீரமணி கலைஞா் உண்மை என்பாா்கள்.

தஞ்சை பிரகதீஸ்வரா் திருக்கோவிலை கட்டியவா் கஜிினி மஹம்மது என்போம் யாா் கேட்க போகின்றாா்கள்.மானமிகு வீரமணி கலைஞா் உண்மைஎன்பாா்கள்.

சோமநாதா் ஆலயத்தை 18 முறை கொள்ளையடித்தவா் மராட்டிய வீரா் சத்ரபதி சிவாஜி என்போம்யாா் கேட்க போகின்றாா்கள்.மானமிகு ? வீரமணி கலைஞா் உண்மைஎன்பாா்கள்.

குரான் முஹம்மதுவை பின்பற்றும் எவனுக்கும் சிலைகளை உடைக்கவேண்டும் என்ற உத்வேகம் இயல்பாகவே ஏற்பட்டு விடும்.அரபு கலாச்சாரம் தவிர பிற கலாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். ஆகவே திப்பு சில நல்லகாாியங்களைச் செய்திருப்பாா்.

குரான் முஹம்மது அவாின் மனதிற்குள் புகுந்த காரணத்தால் அவா் பல அட்டுழியங்களைச் செய்ததும் உண்மை.உண்மை.உண்மை.அது ராணுவ தந்திரம் என்று நியாயப்படுத்தினாலும் செய்வீா்கள்.

பாதிக்கப்பட்டவா்கள் இந்துக்கள் என்பதால் தங்களுக்கு அலட்சியம்.

எனக்கு பதைபதைப்பு.

போதுமா.


Dr.Anburaj said...


இவா் ஒரு இந்து

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஈ தேஷ் என்ற பத்திரிகை முந்தைய வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தை வெளியிட்டது.
மும்பையில் அவசரம் அவசரமாக மாலையில் அலுவலகத்திலிருந்து தொழுகைக்குச் செல்லக் கிளம்பினார் ரமீஸ்.பொதுவாக அவர் தொழுகையை ஒரு நாளும் தவற விட்டதே இல்லை.
அன்று அவசரத்தில் தனது பர்ஸை ஆபீஸ் டிராயரிலேயே விட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் உட்கார்ந்த அவர் பையில் கையை விட்ட போது பகீர் என்றது. பர்ஸைக் காணோம். அலுவலகத்திலேயே அதை விட்டு விட்டோம் என்பது அப்போது தான் அவருக்குப் புரிந்தது.

இப்போது ஆட்டோகாரருக்குக் கொடுக்கக் கூட ஒரு பைசா இல்லை.

திரும்பி அலுவலகம் சென்று பர்ஸை எடுக்கலாம் என்றால் தொழுகை முடிந்து விடும். நேரமே இல்லை. ‘போதாத நேரம்’ அவருக்கு.

என்ன செய்வது?ஒரு கணம் ஆட்டோ டிரைவரைப் பார்த்தார்.

நெற்றியில் நீள்மான குங்கும திலகக் கீற்று. கையில் கண்பதி உற்சவத்திற்கான பச்சையை வேறு இரு கரங்களிலும் அவர் குத்தி இருந்தார். நல்ல கணபதி பக்தர் போலும்!

ரமீஸின் பதட்டத்தைக் கவனித்த டிரைவஎ, “என்ன, ஏதாவது தகராறா, சாஹப்” என்று கேட்டார்.
ரமீஸ் தன் நிலைமையைச் சொன்னார்.

“என்னை மசூதியில் இறக்கி விட்டு இருபது நிமிடம் காத்திருங்கள். தொழுகையை முடித்து கொண்ட உடனேயே என் வீட்டிற்குப் போய் அங்கு உங்களுக்கான ஆட்டோ சார்ஜையும் கூடவே காத்திருந்ததற்கான வெய்டிங் சார்ஜையும் தந்து விடுகிறேன். தொழுகையை மட்டும் தவற விட்டு விடக் கூடாது. எனக்கு இதைச் செய்ய முடியுமா?” என்று அவர் டிரைவரைக் கேட்டார்.பிஸியான் மாலை நேரம். மும்பையில் ஆட்டோ சவாரீயில் ஏதோ சிறிது ச்ம்பாதிக்க உகந்த நேரம்.டிரைவர் தனது வேண்டுகோளை ஏற்பாரா?

“கவலைப்படாதீர்கள். உங்களை மசூதியில் டிராப் செய்து விடுகிறேன். ஆனால் காத்திருக்க ம்ட்டும் என்னால் முடியாது.தொழுகையை நல்லபடியாக முடித்து வீடு திரும்புங்கள்”

டிரைவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார் ரமீஸ்.

மசூதி வந்தது. அங்கு ஆட்டோ டிரைவர் செய்ததைப் பார்த்து ஆடிப் போனார் ரமீஸ்.

தன் சட்டைப் பையில் கையை விட்டு சில நோட்டுகளை எடுத்த டிரைவர், ரமீஸிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள். வீடு போய்ச் சேருங்கள்” என்றார்.

ரமீஸ் இறங்கியவுடன் ஒரு வார்த்தையும் மேற்கொண்டு பேசாமல் ஆட்டோ சர்ரென்று கிளம்பியது.
பிஸியான் நேரத்தில் பிழைப்புக்கான அடுத்த சவாரியை நோக்கி அது கிளம்பியது!

தொழுகையை முடித்த ரமீஸ் பிரமிப்பிலிருந்து விடுபடவே இல்லை.

மாலையில் நடந்த சம்பவம் அவர் மனதை விட்டு அகலவே இல்லை.

மறு நாள் அந்த ஆட்டோ டிரைவரைத் தேட ஆரம்பித்தார். நெடு நேரம் பல தெருக்களில் தேடிய பின்னர் அவரைக் கண்டு பிடித்தார்.
அவரைப் பார்த்த ஆட்டோ டிரைவர், கூப்பிய க்ரங்களுடன், “அட வந்து விட்டீர்களா?” என்று வரவேற்றார்.
‘வந்து தானே ஆக வேண்டும். நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் என்றுமே நான் மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க்ச் சொன்னார் ரமீஸ்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோவுக்கான கட்டணத்தை நன்றியுடன் சேர்த்துக் கொடுத்தார் ரமீஸ்.
அவர் திரும்பும் போது அவர் கையில் ஆட்டோ டிரைவர் கொடுத்த கண்பதி உற்சவத்திற்கான அழைப்பிதழ் இருந்தது.
ரமீஸின் உள்ளமோ ஒளி மயத்தால் விகசித்தது.

இப்படியும் ம்னிதர்கள் இருக்கிறார்கள்!

இந்து பண்பாடு கற்றுத்தந்த சீலம்.



Dr.Anburaj said...

நம்மில் பலருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணம் நமது பேச்சுதான். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ (நுணல்= தவளை) என்பது போல எதையாவது பேஸ்புக் ( Facebook) -கிலோ, ஈ மெயி (E mail) லிலோ, கட்டுரையிலோ எழுதி வைப்போம்;
இப்படி எல்லாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கத்தான் வள்ளுவன்
‘யாகாவாராயினும் நா காக்க’
என்று சொல்லி வைத்தான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? நம்மால், சாப்பாட்டு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; பேச்சு விஷயத்திலும் நாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.எழுத்து விசயத்திலும்கட்டுப்படுத்த முடியவில்லை

இப்படிக் கட்டுபடுத்த முடியாதவர்களுக்கு ஒரு நல்ல வழியையும் ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர். பேசாமல் மவுனமாக இருக்கப் பழகிக்கொள் என்று
மௌனமாக இருந்துவிட்டால் அங்கு சண்டை , சச்சரவுகள், தகராறுகள் கலகங்கள் வெடிக்காது.



உற்றதொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம்

பற்று செபத் தோர்க்கில்லை பாவங்கள் -- முற்றும்

மவுனத்தோர்க் கில்லை வருகலகம் துஞ்சாப்

பவனத்தோர்க் கில்லை பயம்

--நீதி வெண்பா செய்யுள்

தமக்கேற்ற தொழிலைச் செய்வோருக்கு பணப் பற்றாக்குறை வராது;

அன்போடு வழிபடுவோருக்கு கர்ம வினை என்பது ஒட்டாது;

சிறிதும் பேசாமல் மவுனத்தைக் கடைப்பிடிப்போருக்கு தகராறு, கலகம் என்பதே கிடையாது;

துஞ்சுதல் (உறங்குதல்) இல்லாத தேவர்களுக்கு பயம் என்பதே இல்லை. (கண்ணை மூடினால்தானே பயம்!)

மவுனம் பற்றிய இதே கருத்து சாணக்கிய நீதியிலும் வேறு பல நூல்களிலும் உளது. இதோ சில பொன் மொழிகள்:-

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

Dr.Anburaj said...

பங்களாதேசத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான நாமசூத்திரர்கள் என்கிற ஸ்ரீஜனர்களை முஸ்லீம் லீக் கட்சியினர் கொலை செய்யக் காரணமாக இருந்தவர் அம்பேத்கார். அவரால் கொல்லப்பட்ட, சொத்துகளைப் பறிகொடுத்த, வன்புணரப்பட்ட, சுவற்றில் அடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிகர்களின் எண்ணிக்கை சே குவேரா செய்த கொலைகளை விட அதிகம்.

இவர்கள் கொலைக்கு அம்பேத்கார் எப்படிக் காரணமானார் ?

முஸ்லீம் லீக் கட்சியோடு கூட்டணி வைத்திருந்த அம்பேத்காரின் கட்சிக்கு, வங்காளத்தில் செல்வாக்கு இருந்தது. ஆனால், முகமதியர்களோ இந்துக்களுக்கு எதிராகக் கொடுமைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பல இந்துக்கள், முக்கியமாக உயர்த்தப்பட்ட சாதியினர், வெளியேற ஆரம்பித்தனர். அப்போது, ஸ்ரீஜனங்களின் தலைவராகவும், அம்பேத்கார் கட்சித் தலைவராகவும் இருந்த ஜோகேந்திர நாத் மண்டல் அம்பேத்காரிடம் அங்கிருக்கும் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால், ஸ்ரீஜனங்கள் அங்கிருந்து வெளியேறலாமா எனக் கேட்டிருந்தார்.

அவர்கள் வெளியேறிவிட்டால் அங்கே அம்பேத்காருக்கு அரசியல் செல்வாக்கு இருக்காது. அத்துடன், முஸ்லீம் லீகின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே, ஸ்ரீஜனங்கள் செத்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் அம்பேத்கார் ஜோகேந்திரநாத்திடம் பங்களாதேசில் இருந்து வெளியேற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

மீண்டும் பிரச்சினைகள் அதிகரித்தன. ஜோகேந்திரநாத் அம்பேத்காருக்கு மீண்டும் கடிதம் எழுதி வெளியேறிவிடலாமா என்று கேட்டார். அதற்கு அம்பேத்கார் முஸ்லீம் லீகானது ஹிந்து மதத்தைக் கட்டிக் காக்கும் பிராமணர்களை மட்டுமே எதிர்க்கும் (அதாவது கொலை செய்யும்) ஸ்ரீஜனங்களை முஸ்லீம் லீக் கொல்லாது என்று உறுதி அளித்து, ஸ்ரீஜனங்கள் பங்களாதேஷைவிட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டார். இதன் மூலம் முஸ்லீம்களின் நன் மதிப்பையும் பெற்றார்.

ஜோகேந்திரநாத் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்த கலவரம் ஆரம்பித்தது. உயர்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையானவர் இந்தியாவுக்கு வந்துவிட்டதால், முஸ்லீம் லீகிற்குக் கொலை செய்ய, வன்புணர, கொள்ளை அடிக்கக் கிடைத்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரீஜனங்களே.

ஜோகேந்திரநாத்தின் சாதியான நாமசூத்திரர்களே அதிகம் கொலை செய்யப்பட்டனர். நாமசூத்திரப் பெண்கள் வன்புணரப்பட்டனர். குழந்தைகள் சுவற்றில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர்.

அம்பேத்காரின் உத்தரவால் வெளியேறாமல் இருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் நடுத்தெருவில் செத்துக் கிடந்தனர். குறைந்தது 500,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது வழக்கம்போல உண்மைக் கணக்கின் மூன்றில் ஒரு பாகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

அம்பேத்கார் இந்தப் படுகொலைகள் பற்றி, கண்டிப்பதென்ன, எங்கும் பேசக்கூட இல்லை. அதுகுறித்து முற்றிலும் மௌனம் காத்தார்.

இங்கனம் இந்துக்களைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தந்த அம்பேத்காருக்கு எலும்புத் துண்டு பரிசாக அவரை 1952ல் ராஜ்யசபை உறுப்பினராக அனுப்பியது முஸ்லீம் லீக். அம்பேத்கார் உத்தரவைச் செயல்படுத்திய ஜோகேந்திரநாத் மண்டலுக்கு பாகிஸ்தானின் கான்ஸ்டிட்யூஷன் வடிவமைப்பின் தலைமைப் பதவி கிடைத்தது.

பல லட்சக்கணக்கான ஸ்ரீஜனங்களின், ஹிந்துக்களின் பிணத்தின்மீதேறி சந்தோஷமாகப் பதவி பெற்றுக் கொண்டார் அம்பேத்கார்.

மனசாட்சி கேட்காமல், பாகிஸ்தானின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் ஜோகேந்திரநாத். அந்த ராஜினாமா கடிதத்தில், அம்பேத்காருக்குப் பலமுறை பிரச்சினை குறித்துத் தான் எழுதியதையும், இருப்பினும் அங்கேயே இருக்கச் சொல்லி அம்பேத்கார் பதிலளித்ததையும் சொல்கிறார் ஜோகேந்திரநாத்.

அந்தக் கடிதத்தைப் படிக்க: https://wikilivres.ca/wiki/Resignation_letter_of_Jogendra_Nath_Mandal
அந்தக் கலவரங்களைப் பற்றி அறிய: https://en.wikipedia.org/wiki/1950_Barisal_Riots

எனவே, சே குவேராவைவிட பல படுகொலைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும், சொத்துகள் கொள்ளையடிக்கப்படவும் காரணமாக இருந்த அம்பேத்கார்தான் பெரிய போராளி.

Dr.Anburaj said...


அவர் சொன்னதில் ஒரு தவறும் இல்லை.

இஸ்லாம் வளருவதை தடுக்க யூதர்கள் உருவாக்கிய அமைப்பே

ஐஎஸ்ஐஎஸ்.

என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.நிரூபிக்கப்படவேயில்லை.

தமிழ் ஹிந்து வலைதளத்தில் தாங்கள் பதிவு செய்த அண்டபுளுகு ஆகாய புளுகு .

இவா்கள் குரான் என்ற அரேபிய விஷத்தை குடித்து

அறிவு கெட்ட மனநோயாளிகள்.

இவர்களுக்கும் யுதா் களுக்கும் சம்பந்தம் இல்லை.

இருக்கவே முடியாது.

ஐஎஸ.காடையா்களில் வளா்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஐஎஸ் காடையா்கள் ஈராக்கில் ஆட்சியை பிடித்தாா்கள் எனில் குறைந்தது 2 ஆண்டுகளில் இஸ்ரவேல் மீது போா் தொடுப்பாா்கள்.

ஈராக் மண்ணில் வாழ்ந்தும் அரேபிய மத கைநாட்டு போ்வழிகளை ரசுல் எனச் சொல்லாத

சிறுபான்மை yezdi இன மக்களின் பெண்களை -குரான் வழியில் ஆண்களைக் கொன்று-

செக்ஸ் அடிமைகளாக ராணுவ முகாம்களில் வைத்திருந்து கொடுமை செய்த பாவம்

இவன்கள் இன்று செத்து ஒழிந்து கொண்டிருக்கின்றான்.வாழ்க அமோிக்கா.வாழ்க

இஸ்ரவேல்.

கத்தாா் மற்றும் சவுதி அரேபியா இடையே ஏற்பட்டுள்ள தாவாவிற்கும் காரணம் யுதா்களா ?
சவுதியில் இளவரசா் மாற்றப்பட்டுள்ளாா்.தற்போதைய மன்னா் தனது மகனையே வருங்கால மன்னா் ஆகும் வகையில் கிாிடம் தாித்த இளவரசா் ஆக்கியிருக்கின்றாா். இது ஜனநாயகமா ?
சா்வாதிகாரமா ? ஜகாலியாவா ? ஒரு குடும்பம் ஒரு நாட்டை ஆளுகின்றது.அடிமையாக வைத்திருக்கின்றது.என்ன சாியா ? இது குறித்து பதிவு செய்ய தங்களுக்கு துணிவு உண்டா ?

ASHAK SJ said...

பாவம் பைத்தியம் பிடித்து விட்டது தனியாக புலம்புகிறார்

Dr.Anburaj said...

ஆஷிக் குச்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டு விட்டு தொட்டிலில் தூங்கி முழித்து விட்டாய்

போலிருக்கின்றது. இந்து வாக அப்பாவியாக அரேபிய காடையா்களின் சுழ்ச்சி சுது அறியாத வெள்ளைஉள்ளம் படைத்தவா்களாக பிறந்து விட்டோமே என்பதை நினைத்து புலம்புகின்றேன்.
என்ன செய்வது ?

என்து பதிவுகளில் உள்ள கருத்துக்களை ஒவ்வொன்றாக மறுக்கும் யோக்கியதை உனக்கு கிடையாது.அரேபிய சாக்கடையில் வாழும் சிறு தவளை நீ.